Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் தன்னுடைய ஒப்பனை இல்லாத, நோபில்டர் என்னும் புகைப்பட நுட்பத்தினை உபயோகிக்காத புகைப்படத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
இது நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பெண்களின் வெளித்தோற்றத்தைப்பற்றி பல கேள்விகளை எழுப்பியது.
இன்றைய காலத்தில் வெளித் தோற்றத்தைப்பற்றிய மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்ளும் போது ஒவ்வொரு பெண்ணும் அவர்கள் விரும்பிய முறையில தனது வெளித்தோற்றத்தைப்பற்றியும் அழகினைப்பற்றியும்; தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் நாம் விரும்பிய முறையில் நம் வெளித்தோற்றத்தைப் பற்றிய எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய சமுதாயத்தில் காலம் காலமாக நிலவி வரும் பெண்களின் வெளித்தோற்றத்தினைப் பற்றிய கருத்துகள் தான்.
இத்தகைய நேரிடையான எண்ணங்களை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருவதற்கான முக்கிய காரணம் நான் அத்தகைய பெண்களை நேசிப்பது தான்.
பொது இடங்களில் ஒப்பனையின்றி சாதரண மக்களைப் பார்க்க முடியும். ஆனால் ஒப்பனையின்றி நடிப்புத் துறையிலிருக்கும் எந்தவொரு பெண்ணும் வெளியிடங்களுக்கு வருவதில்லை. அப்படி அவர்கள் வர நேர்ந்தால் சமூக ஊடகங்கள் அவர்களை கேலி செய்யத் தயங்குவதில்லை.
இன்றும் சில பிரபலங்கள் தன்னுடைய வெளித்தோற்றத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். தனது தோற்றத்தைப் பற்றி மற்றவர்கள் கேலி பேசுவதையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
சமீபத்தில் தன்னுடைய ஒப்பனையில்லாத புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைத்தளத்தில் வெளியி;ட்டு;ள்ளார். தன்னுடைய உண்மையான நிறத்தினையும் முகத்தோற்றத்தையும் பகிர்ந்து அழகு என்பதற்கான புதிய அர்த்தினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவருடைய ஒப்பனையில்லாத இரண்டுப்புகைப்படங்களும் மிகச் சிறந்த செய்தியினை பெண்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அவருடைய ஒப்பனையில்லாத முதல் கருப்பு-வெள்ளை புகைப்படத்தில் அவர் எழுதியிருந்தார். இந்தப் புகைப்படத்தினை பகிர்ந்து கொள்ள அதிக மனத்தைரியத்துடன், மிகுந்த தயக்கத்துடன் ஒப்பனையையும் நான் கைவிட வேண்டியிருந்தது. (#bareface #sansmakeup #therealme #nofilterneeded #skinbeneaththepolish #freckles).
இரண்டாவது புகைப்படம் பில்டர் உபயோகிக்காமல் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்துடன் அவர் எழுதியது. “யாரும் தங்களை அடையாளம் காண விரும்புவதில்லை. ஏனென்றால் நாம் வாழும் உலகம் வெளித்தோற்றத்தால் இயங்குகின்றது. சமூக வலைத்தளங்கள் நம்முடைய சுயமரியாதையை அடையாளமில்லாமல் அழித்துவிட்டது. கோடிக்கணக்கான ருபாய்கள் அழகு சாதனப் பொருட்களுக்காக செலவிடப்படுகின்றது. தன்னுடைய புறத்தோற்றத்தினைப் பற்றி சிந்தனையிலேயே பலரும் இருக்கின்றனர். அவர்களுடன் நாம் இணைந்து கொள்ள முயன்றாலும் நாம் தனித்துவிடப்படுகிறோம். உண்மையான மகிழ்ச்சி என்பது நாம் எவ்வாறு தோன்றுகிறோமோ அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையினை உருவாக்கிக் கொள்வதுதான். நம்முடைய வெளித்தோற்றத்தினை நாம் அலங்கரித்துக் கொண்டாலும் அது நம்முடைய குணநலன்கள் அல்லது நாம் யார் என்பதை வெளிப்படுத்துகின்றதா? உண்மையான அழது என்பது நாம் எவ்வாறு தோன்றுகின்றோமோ அவ்வாறு நம்மை நேசிப்பது தான்.
இவ்வாறு அவர் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டது நாம் நம்மை நேசிக்க முதலில் கற்றுக் கொண்டு நாம் எப்படியிருக்கின்றோமோ அப்படியே வாழக் கற்றுக் கொண்டால் நேர்மறை எண்ணங்களுடன் நம்முடைய இதயமும் மனமும் வாழும். இது நிச்சயம் அதிகமான சுய பலத்தினை பெண்களுக்குத் தரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
Professor by profession, gypsy soul, loves everything ethnic, believes in love, compassionate epicurean and a smart foodie ❤️ read more...
Please enter your email address