திருமணமான பெண்களுக்கும் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் கடமை உள்ளது

இது பெண்களின் சமத்துவ உரிமை வேண்டுமென்ற கோரிக்கையில் முன்னேற்றத்திற்கான முதல் அறிகுறி.

இது பெண்களின் சமத்துவ உரிமை வேண்டுமென்ற கோரிக்கையில் முன்னேற்றத்திற்கான முதல் அறிகுறி.

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய முக்கியமான தீர்;ப்பு – ஒரு திருமணமான பெணணுக்கும் தன்னுடைய பெற்றோரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது.

இது பெண்களின் சமத்துவத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான நடவடிக்கை ஆகும். இது எப்போதும் போல ஒலிக்கும் உரிமைகளுக்கான குரல் அல்ல. நம்முடைய கடமைகளைச் செய்யவும் உரிமையுண்டு என்று சொல்வதாகும்.

தீர்ப்பு

திருமணமான மகளும் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல் மறுசீரமைப்பு விண்ணப்ப எண் 172ஃ2014, வசந்த் எள. கோவிந்த்ராவ் உபாஸ்ராவ் நாயக் ஆகியோர் தொடர்ந்த வழக்கினில், திருமணமான மகள் தன் கணவரின் குடும்பத்திற்கு மட்டுமே கடமைகளைச் செய்ய வேண்டும், தன்னுடைய பெற்றோர்களுக்கு அல்ல என்ற கருத்தினை ஏற்புடையது அல்ல என்று நிராகரித்துள்ளது.

பழமையான கருத்துகள்

இந்த தீர்ப்பின் மூலமாக வெகு காலமாக நம் சமுதாயத்தில் ஆழமாக இருக்கும் பழைமையான கருத்துகள் அழிக்கப்படலாம்.

இன்றும் நம் சமுதாயத்தில் பெண்களை விட ஆண்களுக்கு மட்டுமே கல்வி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கின்றனர். ஆண் பிள்ளைகளே தங்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். இந்த தீர்ப்பு இதுவரை பாரபட்சமாக இருந்த பெற்றோர்கள் தங்களது பெண்களுக்கும் கல்வி அளித்திட முன்வரச் செய்யலாம்.

மேலும் இது திருமணமான மகள்கள் வேறு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களிடமிருந்து பண உதவி அல்லது உதவி பெறுவது தவறு என்று நம்பிக்கையை மாற்றவும் உதவி செய்யும்.

நம் சமுதாயத்தில் நிலவிடும் ஒரு திருமணமான பெண் அவளுடைய கணவனின் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டால் அவளுடைய பெறறோரின் குடும்பத்தை விட்டு நிரந்தரமாக விலகிச் சென்றுவிட்டாள் என்று தவறான எண்ணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவும் எண்ணலாம்.

இந்த தீர்ப்பு பெண்கள் நிதி சார்ந்த செயல்பாடுகளில் சுதந்திரமாக இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுது பெற்றோர்களுக்கும் தான் என்று வலியுறுத்தியுள்ளது.

ஒரு பெண் சுமையாக கருதப்படாலிருக்கும் போது, வரதட்சணை மற்றும் பெண் சிசுக் கொலை ஆகியும் குறையலாம் என்று நம்பிக்மையினைத் தருகின்றது.
மிக முக்கியமாக இந்த தீர்ப்பு பாலினம் சார்ந்த தீர்மானிக்கப்பட்ட வரையறைகளையும் அழித்திட வேண்டும்.

இந்த தீர்ப்பிற்கு எங்களத மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்!

About the Author

Smita Sarda

A software engineer ,who loves to travel.A writer by heart. read more...

1 Posts | 1,671 Views
All Categories