Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் கண்ணோட்டத்தில் அவர்களை சிறுமைபடுத்துவது, எதிர்மறை ஆணாதிக்கக் கருத்துகளை தமிழ் திரைப்படங்கள் இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக பகிர்ந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் சென்னையில் ஒரு பள்ளியில் 15 முதல் 16 வயதான மாணவர்களுடன் பாலின சமத்துவம் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினேன். அந்த பயிற்சி வகுப்பினில்; ஒப்புதல் வழங்குதல், நிராகரிப்பினைக் கையாளுதல், நம்மிடம் ஒருவர் கொண்ட ஈடுபாட்டினை தெரியப்படுத்தும் போது பதில் சொல்லுதல் பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டேன். அவர்களது பதில்களை பரிசீலனை செய்யும் போது ஒன்று புரிந்தது. ஒப்புதல் வழங்குதல் பற்றிய அவர்களது கருத்துகளில்; ஆணாதிக்கருத்துகளை பரப்பிடும் திரைப்படங்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழிப் நடுநிலைப்பள்ளிகளில் நடந்த பயிற்சி வகுப்புகளும் இதனையே மேலும் வலியுறுத்தியது. பயிற்சி வகுப்பினில் கலந்து கொண்டவர்களின் மனநிலையினில் ஒரு மாற்றம் தெரிந்தாலும், எங்களால் சென்றடைய முடியாத எண்ணற்ற இளம் உள்ளங்களைப் பற்றிய கவலையே மிகப் பெரிய அளவினில் இருந்தது.
இத்தகைய நிலைக்குத் திரைப்படங்களே முக்கிய காரணம் என்று சொல்வது மிகையானாலும், இக்கால சமுதாயத்தின் பண்பாடு மாற்றங்கள் மிகப் பெரிய அளவில் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட பாடல்களால் ஏற்படுகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் கண்ணோட்டத்தில் அவர்களை சிறுமைபடுத்துவது எதிர்மறை ஆணாதிக்கக் கருத்துகளை தமிழ் திரைப்படங்கள் இளைய தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக பகிர்ந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான் சென்னையில் ஒரு பள்ளியில் 15 முதல் 16 வயதான மாணவர்களுடன் பாலின சமத்துவம் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பினை நடத்தினேன். அந்த பயிற்சி வகுப்பினில்; ஒப்புதல் வழங்குதல், நிராகரிப்பினைக் கையாளுதல், நம்மிடம் ஒருவர் கொண்ட ஈடுபாட்டினை தெரியப்படுத்தும் போது பதில் சொல்லுதல் பற்றிய அவர்களது கருத்துக்களைக் கேட்டேன். அவர்களது பதில்களை பரிசீலனை செய்யும் போது ஒன்று புரிந்தது. ஒப்புதல் வழங்குதல் பற்றிய அவர்களது கருத்துகளில்;
ஆணாதிக்கருத்துகளை பரப்பிடும் திரைபடங்களின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனை நன்றாக புரிந்து கொள்ள, பொதுவாக இந்திய திரைப்படங்களில் காணப்படும் காட்சி ஒன்றினை இங்கே தருகின்றேன். ஒரு பெண்ணை ஒரு ஆண் விளையாட்டாகத் துரத்தி செல்கிறார். அப்பெண்ணின் ஆடைகளைத் தொடுவதும், அப்பெண்ணின் இடுப்பினில் கிள்ளுவதும், தொடுவதும், சைகைகள் செய்வதுமாக இருக்கின்றார். முறையற்ற செய்கைகளால் கோபமுறும் அப்பெண் முறைத்துப் பார்க்கின்றாள், தன்னுடைய விரல்களை அசைத்து எச்சரிக்கவும் செய்கின்றாள்.
இவை அத்தனையும் நடனமாடும் சில பெண்களின் பின்னனியில் நடக்கின்றது. சுpல நேரங்களில் இது மக்கள் அதிகமாக வந்து செல்லும் கடை வீதிகளில் நடந்தாலும், சுற்றிலும் உள்ள மக்கள் எதுவும் செய்யாமல், சொல்லாமல் வேடிக்கை பார்க்கின்றனர். இரண்டு காட்சிகளுக்குப் பிறகு அவள் அவனுடைய தோழியாகின்றாள். காரணம் என்ன? அவனது நடவடிக்கைகள் அவள் மீது அவன் வைத்திருந்த காதலை காட்டுகின்றது மேலும் அதை வெளிப்படுத்தவே அவன் அவ்வாறு நடந்து கொண்டான்.
இந்திய திரைப்படங்களில் எந்த மொழியாகயிருந்தாலும் – இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி எதுவாக இருந்தாலும் இது சாதரணமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கின்றது. நம் நாட்டின் சமுதாய மதிப்பீடுகள் ஆணாதிக்க சமுதாயத்தின் நம்பிக்கைகளைச் சார்ந்தே இருக்கின்றது. பாலியல் வன்முறை, ஈவ்-டீசிங் என்று அழைக்கப்படும் மனரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பாலியல் துன்புறுத்தல் போன்ற நிகழ்வுகள் இத்தகைய திரைப்படங்களால் ஏற்பட்ட பாதிப்பாகவே உள்ளது.
பெண்களின் ஓப்புதலும் வேண்டும் என்ற எண்ணத்திற்கு என்றும் மதிப்பில்லை பாலியல் வன்முறை, பெண்களை பின்தொடர்வது, மனரீதியாக பயமுறுத்துவது, காட்டாயப்படுத்தி உறவு கொள்வது போன்ற செயல்களுக்கு பெண்களை உட்படுத்துவத்துவதற்கான காரணம் ஒன்று தான்; தங்களுடைய உரிமைப் பொருளாக பெண்ணை நினைப்பதுதான். மேலே சொன்ன காரணங்களில் ஏதோ ஒன்று தான் இந்த ஆதிக்கம் சார்ந்த குற்றம் நடப்பதற்கு காரணமாகின்றது.
காமம் மற்றும் பாலியல் உறவு ஆகியவை முக்கிய காரணமாக இருந்தாலும் பெண்களின் மேலே ஆண்கள் தங்களுடைய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவே இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.
திரைப்படங்கள் ஆணாதிக்கத்தினை ஒரு புறம் திரையில் சித்தரிக்கையில் மறுபுறம் பெண்கள் தங்களது சம்மதித்தினை தெரிவிப்பதுவும் முக்கியம் என்று கூறி மறைமுகமாக ஆணாதிக்கத்திற்கு ஆதரவினை தருகின்றது. இந்த செய்கையின் மிகப்பெரிய தாக்கம் பெண்களின் சம்மதம் என்பதற்கு எந்தஒரு மதிப்புமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது சாதாரண மனிதர்கள் பெண்களின் எதிர்ப்பிற்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை என்று நம்புவதற்கு வழிவகுக்கின்றது. பெண்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் அவர்கள் வேண்டும் என்று தான் நினைக்கின்றனர், வேண்டாம் என்று நினைக்கவில்லை என்று நம்புகின்றனர்.
பாலினம் சார்ந்த வன்முறை நிகழ்வதற்கு சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை, எண்ணங்கள், மற்றும் மக்கள் வாழும் கலாச்சாரபின்னணியும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வாரு குற்றம் நடப்பதற்கும் ஒரு காரணம் அல்லது அக்குற்றம் நடக்கக்கூடிய சூழழும் முக்கிய பங்காற்றுகிறது.
குற்றம் நடக்கக்கூடிய சூழல் உருவாகுவதற்கு பல வெளிப்படையான மற்றும் மறைமுக காரணங்கள் உள்ளன. அவை நம்பிக்கைகள், அணுகுமுறைகள், செயல்கள், சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பதில்கள் மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகிவை. ஒரு குற்றம் அல்லது குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கு சூழல் மட்டுமே காரணமாக முடியாது என்றாலும் அது குற்றம் நிகழ்வதற்கான ஏற்ற மனநிலை தாக்கத்தையும், ஊக்கமூட்டும் விதமாக குற்றம் நடப்பதினை நியாயப்படுத்தவும் உதவுகிறது.
பாலியல் வன்முறை மற்றும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது ஆகியவை இன்று வருத்தம் தரும் விதத்தில் பரவலாக உள்ளது என்பதற்கான தெளிவான விளக்கத்தை வழங்குவதற்கு எண்ணற்ற காரணங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம் என்றாலும், கலாச்சாரம் சார்ந்த சில அம்சங்களும் இந்த குற்றங்களைப் பாதுகாப்பதில் முக்கியமான பங்காற்றுகிறது. இந்த விஷயத்தில் தமிழ் திரைப்பட துறை கலாச்சாரம் சார்ந்த சில நடவடிக்கைகளை திரையினில் காட்டி ஊக்குவிக்கின்றதன் மூலமாக கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றினை ஆண்மையின் வெளிப்பாடாகவும் மேலும் அந்நடவடிக்கை அவர்களை சுற்றி உள்ள பிற ஆண்களாலும் அங்கீகரிக்கபடுவது போலவும் எண்ணவைக்கிறது.
இசை மற்றும் பாடல் வரிகள், உரையாடல்கள் மற்றும் பெண்களை ஒரே மாதிரியான பாத்திரங்களில் சித்தரிப்பது திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் பெண்களுக்கு சமத்துவமின்மை இல்லாத நிலையைக் காட்டுகின்றது. தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று பெண்களின் பத்திரப்படைப்புகளே. இன்றைய திரைப்படங்கள் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு எதிர்காலமும் இல்லையென்றும் பெண்களை வெறும் பாலுணர்வினை தணிக்கும் பொருளாகவும் பாலியல் உறவிற்கு ஒரு பெண்ணின் ஒப்புதல் பெறுவது முற்றிலும் புறக்கணிக்கப்படும் ஒன்றாகவும் திரையினில் காட்டுவது மனித நேயத்தினையே கேள்விக்குரியக்குகின்றது. பெரும்பாலான திரைப்படங்கள் பெண்களின் சம்மதம் என்ற கருத்தையே முற்றிலுமாக நிராகரிக்கின்றன.
ஒரு ஆணின் பாலியல் விருப்பத்திற்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கும் பதிலினை பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உதாரணமாக தமிழ் திரைப்படங்களில் ஒரு ஆண் ஒரு பெண்ணின் மனதினை கவர்வதற்கு துன்புறுத்துதல், கேலி செய்தல், பாலியல் தொந்தரவு செய்தல், மற்றும் அப்பெண் அவனுடைய விருப்பத்திற்கு இணங்கும்வரை அவளை தொடர்ந்து சென்று தொந்தரவு செய்வது போன்ற வழிகளை கையாளுகின்றார்.
இவ்வாறு திரைப்படங்களில் காண்பிக்கப்படுதல் ஒரு ஆண் ஒரு பெண்ணை பின்தொடர்தல், அவமானப்படுத்துதல், தொல்லைப் படுத்துதல், பலவந்தப்படுத்துதல் ஆகியவற்றை நியாயப்படுத்துகிறது.
தமிழ் திரைப்படங்களில் பெண்கள் அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவர்களாகவே காட்டப்படுகின்றனர். இது அவர்கள் அவ்வாறு சித்திரிக்கப்படுவதை மீண்டும் ஆமோதிக் கின்றது – மேலும் அவர்கள் வேண்டாம் என்று சொல்லுவதும் அவர்கள் அவ்வாறு சொல்லுவதற்கு எந்தவிதத்திலும் போதிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் தெரிகின்றது. சில திரைப்படங்களில் பெண்கள் அத்தகைய செய்கைகளை நிராகரித்தாழும் அவர்கள் சம்மதம் சொல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
உதாரணமாக, தமிழில் ‘அடிடா அவள’ என்ற ஒரு பாடல் ஒரு ஆணின் பாலியல் சார்ந்த செயல்பாடுகளை நிராகரித்த ஒரு பெண்ணை கன்னத்தில் அறைவதும், காலால் உதைப்பதும், எந்தவிதத்திலும் சரியானது என்றும், மேலும் அவள் எந்தவிதத்திலும் எதற்கும் தகுதியானவள் அல்ல என்று ஒதுக்கப்படுகிறாள்.
‘பாயும் புலி’ என்ற படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் போலீஸ் அதிகாரியின் பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஒரு பெண்ணை தனது ஆசைக்கு ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பின் தொடர்வதும் அச்சுறுத்தவும் செய்கிறார்.
தென்னிந்திய திரைப்படத்தின் முன்னணி நடிகரான ஒருவர் திரைப்படம் ஒன்றில் கல்லூரியில் படிக்கும் மாணவனாக, தன்னுடன் படிக்கும் அமைதியான பெண்ணை விரும்புகிறான். அவனது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கும் அப்பெண்ணை தலையில் கல்லைப்போட்டு உடைத்துவிடுவேன் என்று மிரட்டுகிறான். இத்தகைய பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்நடிகர் பெரிதும் பாராட்டப்பட்டார்.
திரைப்படங்கள் ஆண்கள் ஆஜானுபாவகவும், ஆக்ரோசமாகவும், வன்முறையாளனாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வது மட்டுமல்ல, இக்குணங்களே ஆண்மை என்றும் சொல்கிறது.
ஒரு நாணயத்தின் ஒரு பக்கமாக பெண்கள் திரைப்படங்களில் காட்டப்படும் விதம் இருந்தாலும், மறுபக்கத்தில் ஆண்கள் இருக்கின்றனர். தமிழ் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஆண் ஒருவன், ஒரு கதாநாயகனாகவோ, வில்லனாகவோ, கதாநாயகியின் தந்தையாகவோ இருந்தாலும் ஆணாதிக்கம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். அந்த ஆதிக்க உணர்வினை வன்முறையால் வெளிப்படுத்துகின்றனர்.
பொதுவாக இத்தகைய திரைப்படங்கள் உருவாகும் கதைகள் ஆணாதிக்கத்தினை மையமாகக் கொண்டுள்ளன – அவர்களுக்குள் நடக்கும் மோதலகள, இலட்சியங்கள், முரண்பாடுகள், ஆசைகள், மற்றும் அவர்களது வீர சாகசங்கள் கதைக்கு உதவி செய்கின்றது.
இது போன்ற திரைப்படங்கள் கதாநாயகர்கள் ஆணுக்கு உரிய முரட்டுத்தன்மையுடனும், வலிமையானவனாகவும், கெட்டவர்களுடன் துணிந்து சண்டை போடுபவர்களாகவும், நடனமாடுவதில் மிகச் சிறந்தவனாகவும், எல்லோரும் விரும்பும் சிறந்த மகனாகவும், இளம் பெண்களின் இதயத்தை வெல்பவனாகவும் காட்டப்படுகிறான். இத்தகைய போக்கு வருத்தமளிக்க கூடியதாகும். இளைய சமுதாயத்தின் மத்தியில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகள் இதைப்பற்றி பேசினாலும், சென்னையில் இளம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல வன்முறை சம்பவங்களின் அச்சத்தினை ஏற்படுத்துகின்றது. ஒரு பெண் தன்னுடைய எதிர்காலத்தினை முடிவு செய்ய முடியாத நிலையினையே இது காட்டுகின்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை சாதரண ஒன்றாக இன்றைய சமுதாயம் எண்ணுவதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கின்றனர்.
ஐ.நா. மகளிர் தூதராக ஐஷ்வரியா தனுஷ் நியமனம், பாலியல் சமத்துவத்தை நோக்கி பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடக மையம் ஆகியவற்றில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இந்த கட்டுரையை நீங்கள் வாசித்து, அந்த நிலைப்பாட்டை கேள்வி கேட்க விரும்பினால் திரைப்படங்களில் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுக்கும் ஆன்லைன் மனுவில் கையொப்பமிடலாம்.
read more...
Please enter your email address