Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
தனித்து வாழும் பெண்ணா நீங்கள்? ஆனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விருப்பமா? அப்படியெனில் இந்தியாவில் ஒற்றைத் தாயாய் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அறிந்து கொள்ளுங்கள்.
எஸ்த்துதாளர்: அதிதி போஸ்; மொழிபெயர்த்தவர் அகிலா ஜ்வாலா
இந்தியாவில், குழந்தை தத்தெடுப்பில் ஆர்வம் காட்டும் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தத்தெடுத்தல் மற்றும் குழந்தை நலம் பேணும் இந்தியன் அசோசியேஷனின் அறிக்கை கூறுகின்றது.
ஏன் இது?
பிரபஞ்சம் முழுவதற்குமான குடும்பம் எனும் அமைப்பிற்கான ஆசையில்தான் இதற்கான விடை இருக்கிறது.
2006 இல் திருத்தப்பட்ட ஜீவெனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் இன்படி (Juvenile Justice Act) தத்தெடுத்தல் என்பது “உயிரியல் ரீதியான பெற்றோர்களிடமிருந்து குழந்தையை நிரந்தரமாக பிரித்து தத்து எடுக்கும் பெற்றோர்களுக்கு சகல உரிமைகள் மற்றும் பொறுப்புகளுடன் குழந்தையை உறவினில் பிணைக்கும் செயல்முறையே”.
1. தத்தெடுப்பு நிறுவனங்கள்
திருமணமாகி ஒரு மகளை தத்தெடுத்துள்ள என் அத்தையிடம் தத்தெடுக்கும் தரும் நிறுவனங்களைப்பற்றிய அவரது எண்ணங்களைக் கேட்டேன், “எனக்கு அது நன்றாகவே வேலை செய்தது” என்று கூறிய அவர் அப்படி எனில் ஒற்றை பெற்றோராய் தனித்துவாழும் தாய்களுக்கு அவர்களுடைய சேவை எப்படி என்று என் அடுத்த கேள்வியைக் கேட்டபோது அவளுடைய பதில் இதுதான்.
“எனக்குத் தெரிந்த பூனேவில் வாழும் பெண் ஒருத்தி குழந்தையைத் தத்தெடுக்க இன்றுவரை முயன்று வருகிறாள், ஆனாலும் அது அவளுக்கு அத்தனை எளிதாக இல்லை”. ஏதேனும் ஒரு காரணம் சொல்லி ஓவ்வொரு முறையும் அவள் வேலை தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது அவள் மட்டுமல்ல, சட்டரீதியாக ஒற்றைத்தாய் (single mother ) தத்து எடுக்க அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் இங்கு, பல நிறுவனங்கள் தனித்து வாழும் பெண்களுக்கு தத்தெடுப்பைக் கடினமான ஒன்றாகவே இன்றும் வைத்துள்ளது.
2. குடும்பம்
கொல்கத்தாவில் பயிற்சி செய்யும் குழந்தைகள் மனோதத்துவ நிபுணர், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் என்னிடம் பேசுகையில் தனக்குத் தெரிந்த சில விவகாரத்தான ஒற்றைத் தாய்மார்கள் தங்களுடைய பெற்றோர்களிடமிருந்தே மிகப்பெரிய தடைகளை எதிர்நோக்குகிறார்கள் என்றார். மேலும் தனித்து குழந்தையை வளர்ப்பது, தந்தையில்லாமல் வளர்ப்பது ஆகியவற்றை சுயநலமானது என்றும் பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இதனால் தங்கள் பெண் கட்டாயம் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள்.
தாய்,தந்தை இரண்டு பேர் சேர்ந்து குழந்தையை வளர்ப்பதே நம் மனதில் வேரூன்றி போயிருக்கிறது. ஒற்றைத்தாய் எனும் விஷயத்தை ஏற்றுக்கொள்வது இன்றளவில் குடும்பத்தில் கடினமானதாகவே உள்ளது.
3. சமூகம்
சில வருடங்களுக்கு முன் நான் டெல்லியில் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் பெண் அரசு சார்பற்ற அமைப்பில் பணிபுரிகிறார், ஓற்றைத் தாயாய் தாய்மையை ஏற்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் சொன்னது இதுதான். “இவர்களைப்பற்றிய சமூகத்தின் பார்வை மிகவும் குறுகலானது. அவர்கள் விருப்பம் இந்தப் பெண்ணின் தந்தை யார்? இருப்பிடம் என்ன? என்பதை தெரிந்து கொள்வதே.” துரதிர்ஷ்டவசமான உண்மை இது. இங்கு பல ஒற்றைப்பெற்றோராய் வாழும் பெண்களுக்கான ஒரு போராட்டமாக இந்தியாவில் துவங்கிவிட்டது.
4. பள்ளிகள்
சில கல்வி நிறுவனங்கள் தாயின் பெயரை சேர்க்கை விண்ணப்பத்தில் கட்டாயம் நிரப்ப வேண்டிய ஒன்றாக நடைமுறையில் கொண்டுள்ளன. ஆனாலும் இன்றளவிலும் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தந்தை பெயர் இல்லாத குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கும் பல பள்ளிகளும் உள்ளன.
5. வேலை- வாழ்க்கை
யாரையும் சாராமல் சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையில் இருந்து வாழ்க்கையை இன்னொரு உயிருடன் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு ஏற்படும் மாற்றம் அத்தனை எளிதானதல்ல. வீட்டு வேலைகளை பங்கீடு செய்ய வாழ்க்கைத்துணை இருக்கும்போதே தாய்மை எனும் பாத்திரத்திற்கு சவாலானதாக இருக்கும்போது ஒற்றை பெற்றோராய் வளர்ப்பதும் அதற்கான சவால்கள் நிறைந்ததே. இதன் காரணமாக ஒற்றைத் தாயாக பல மன அழுத்தங்களை உருவாக்கக்கூடும். முழுவதும் பரபரப்பான வேலைநிறைந்த ஒரு நாளின் பின் தனிமையான நிமிடங்களுக்காக ஏங்கவும், குற்றவுணர்ச்சியில் தங்கள் மனதை பாரமாக்கிக்கொள்ளவும் நேரலாம்.
8. குழந்தையிடம் சொல்லுதல்
என் கல்லூரி பேராசிரியரின் தோழிக்கு குழந்தை வளர்ப்பில் அவளுடைய பெற்றோர் ஆதரவும் அதிர்ஷ்டமாக கிடைத்தது. ஆனாலும் அவளுடைய பெரிய போராட்டம் என்னவெனில் அவளுடைய நண்பர்கள், அவள் தன் குழந்தையிடம் அவள் ஒரு தத்துக்குழந்தை என சொல்ல ஆயத்தம் ஆவதற்குமுன் அதை குழந்தையிடம் வெளிப்படுத்த முடிவு செய்ததுதான். உண்மையில் அந்த முடிவினை ஒற்றைத்தாயாய் அவள் எடுப்பதே சிறந்தது.
1. அரசு சாரா நிறுவனங்கள்
‘சுதத்தா’ போன்ற நிறைய அரசு சார்பற்ற நிறுவனங்கள், தத்து எடுக்கும் குடும்பங்கள் மற்றும் தனித்து வாழும் பெண்களுக்கு உதவுகிறது. இந்நிறுவனம் மூலம் ஒரே மாதிரியான சூழலில் இருக்கும் ஒரே சிந்தனை கொண்ட பெண்கள் சந்தித்து தங்கள் அனுபவங்களையும் அறிவுரைகளையும் பகிர முடிகிறது.
2. இணையம்
தகவல் பரிமாற்றம் மற்றும் பகிர்வுகளின் வசதி காரணமாக உலகம் முழுதும் வலைத்தளத்தில் பல குழுக்களில் இருக்கும் பலர் உதவுகின்றனர் எடுத்துக்காட்டாக பீபிள் குரூப் ஆஃப் அடாப்ஷன் இன் இந்தியா எனும் குழுமம் 700 ஆன்லைன் உறுப்பினர்களுடன் தத்தெடுக்க திட்டமிடும் நபர்களுக்கு உதவும் வகையில் இயங்கி வருகிறது.
3. படியுங்கள்
புத்தகங்கள் தத்தெடுப்பில் சிறந்த வழிகாட்டியாக செயல்படுகின்றன. அவற்றில் சில:
– Toddler Adoption: The Weaver’s Craft by Mary Hopkins– Adoption in India: Policies and Experiences by Vinita Bhargava– Twenty Things Adopted Kids Wish Their Adoptive Parents Knew by Sherrie Eldridge
4. நன்றாக தயாராகுங்கள்
இந்த தத்தெடுக்கும் நிறுவனங்களின் மீதான அவநம்பிக்கை மற்றும் மற்றவர்கள் எழுப்பும் சந்தேகங்கள் அனைத்தும் நீங்கள் எந்த அளவு தயாராக, அக்கறையுடன் மற்றும் நம்பிக்கையுடன் குழந்தையைத் தத்தெடுக்கத் தயாராகிறீர்கள் என்பதை அவர்கள் காணும்போது தானாகவே குறைந்துவிடும்.
உங்கள் பொருளாதார நிலையை நுணுக்கமாக மதிப்பிட்டீர்கள் எனில் உங்களால் நீங்கள் தத்தெடுக்கும் குழந்தைக்கான சரியான எதிர்காலத்தை அமைப்பது குறித்து திட்டமிட முடியும்.
தத்தெடுத்தலின் மூலம் தாய்மையைத் தழுவும் அனைத்து பெண்மணிகளுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் தேர்வு உண்மையில் இதயத்தை வருடும் ஓர் உன்னத செயல்.
Guest Bloggers are those who want to share their ideas/experiences, but do not have a profile here. Write to us at [email protected] if you have a special situation (for e.g. want read more...
Please enter your email address