Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
புதிதாய் மணமான இந்திய பெண்களுக்கு எப்போதும் சொல்லப்படும் குறிப்புகள் அல்ல இவை!
புதிதாய் மணமான இந்திய பெண்களுக்கு எப்போதும் சொல்லப்படும் குறிப்புகள் அல்ல இவை! மாறாக பெண்கள் திருமணத்திற்கு பிறகு அனைவருக்கும் மிதியடி ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற என் எண்ணங்களை இங்கு காணலாம்.
மொழிபெயர்த்தவர் மனிஷி
நான் கவனித்ததினல் புதிதாய் மணமான இந்திய பெண்கள், திருமணம் என்றாலே தன் வாழ்க்கையையே முழுவதுமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிக்கி விடுகிறார்கள்.
ஆம், திருமணம் என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று. அனேகமாக நம்முள் பெரும்பாலானோர் மணம் முடித்து கொள்வோம். காதலும் நட்பும் நமக்கு மிகவும் முக்கியமானவை என்பதும் உண்மையே, ஆனால் தன்னையே இழக்கும் அளவிற்கு அல்ல.
ஆம், இருவர் சேர்த்து வாழும் போது பல விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்டுகள் தொடர்ந்து தேவைப்படும், ஆனால் அவை அனைத்தையும் பெண்களே செய்ய வேண்டியதில்லை.
திருமணத்தை ஒட்டி வரும் நாட்கள் ஏன் முக்கியமானவை? ஏனெனில் அந்நாட்கள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. எதை நீ செய்வாய் செய்ய மாட்டாய் என்பதற்கு. நீ எவ்வாறு நடத்தப்பட விரும்புகிறாய் மற்றும் மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறாய் என்பதற்கு.
புதிதாய் மணமான இந்திய பெண்களிடம் தொடக்கத்தில் நீ வளைந்து கொடுத்தால் நாளைடைவில் மற்றவர்களும் மாறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏன் அனுபவத்தில் இது நடப்பதே இல்லை அல்ல நடப்பதற்கு வெகு காலம் பிடிக்கிறது. எனவே மற்ற வயது வந்தோருக்கு கொடுக்கப்படும் மரியாதை தமக்கும் உரியது என்று என்னும் வயது வந்த புதியதாய் மணமான இந்திய பெண்களுக்கான எனது எட்டு குறிப்புகள் இதோ:
சிலரை திடுக்கிட வைத்தாலும், வாடிக்கையாக நான் கவனித்து வருவது என்னவென்றால் இளம் இந்திய பெண்கள் தன் கணவரை பெயர் சொல்லி அழைப்பதில்லை, குறிப்பாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில். ஆனால் மணப்பெண்ணும் பிள்ளையும் ஒன்றாக படித்து அல்லது வேலை பார்த்து காதல் கல்யாணம் செய்திருந்தாலும் கூட இதை கவனிக்கிறேன்.
இதை என்ன வேண்டுமென்றாலும் கூப்பிடுங்கள் – வெட்கம், பாரம்பரியம், வழக்கத்தை பராமரித்தல் – ஆனால் என்னை பொறுத்த வரையில் நாம் கழித்து கட்ட வேண்டிய ஒரு ஆரோக்கியமில்லா பழக்கம் இது.
சற்று யோசித்து பாருங்கள், நாம் பெயர் சொல்லி அழைக்காதவர் நம் பெரியோர் – அம்மா, அப்பா, அண்ணா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை… உன்கள் கணவர் இந்த பட்டியலில் தான் வருகிறாரா? இல்லையென்றால் ஏன் அவரை பெயர் சொல்லி அழைக்க கூடாது? பெயர் சொல்லி கணவரை அழைக்காதது (ஆனால் கணவருக்கோ அப்படி எந்த தயக்கமும் இல்லை), ஒரு உறவில் யார் மரியாதைக்குரியவர் என்பதை கூறுகிறது.
இளம் இந்திய பெண்கள், ஏற்கனவே சம்பாதிப்பவரிடம் கூட – சிறிது நாட்களுக்கேனும் – புதிய இடத்தில் குடியேற, புகுந்த வீட்டாருடன் ஒத்து போவதற்காக வேலையை விடச்சொல்லி சிபாரிசு செய்வது வழக்ககமாக உள்ளது. பெரிய தவறு. பொருளாதாரம் இருக்கும் நிலையில், கையில் உள்ள வேலையை தக்க வைத்துக்கொள்வதே எளிது.
திருமணத்திற்கு பிறகு வீட்டிலேயே இருக்கும் பொழுது உன்னை இல்லத்தரசியாக பார்க்க துவங்கி விடுவார். எதுவும் புரிவதற்கு முன் கோயில் குளங்களுக்கு போவது, எந்நேரமும் புதுப்பெண்ணை உறவினர் பார்க்க வருவதற்கு தயாராக இருப்பது, மேலும் பல “குடும்ப கடமைகளை” செய்து கொண்டு இருப்பீர்கள்.
இல்லத்தரசியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் உங்களுக்கு வெளியே சென்று வேலை பார்க்கத்தான் விருப்பம் என்றால் மணமானவுடன் இந்த இல்லத்தரசி வலையில் சிக்கி கொள்ளாதீர்கள். ஒரு புது ஊரில், நேரில் சென்றால் தான் வேலை தேடிக்கொள்ள முடியும் என்ற நிலை இல்லாத வரை, வேலையை விடாதீர்கள். ஒரு புது உறவு மலரும் பொழுது தனக்கென பணம் இருந்தால் ஒரு தனித்தெம்புதான்.
ஆம், திருமணத்தின் புதுமை உற்சாகத்தை தூண்டும் ஆனால் உங்கள் நண்பர்களை கைவிடாதீர்கள். திருமணத்திற்கு முன்னால் உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கும் இருந்த பொதுவான பரஸ்பரங்கள் நீடிக்கின்றது அல்லவே? மற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தம் கணவரை தவிர தம் எண்ணங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள மற்றோருவர் தேவையே.
இது குறிப்பாக ஊர், தேசம் மாறும் பெண்களுக்காக. புதிய நண்பர்களை கண்டெடுக்க முயற்சி செய்யுங்கள் – அது ஆத்மார்த்தமான நட்டபாக (இதுவரை) இல்லாவிட்டாலும், பேசி பழக, அக்கம் பக்கத்தில், வேலை பார்க்கும் இடத்தில் – இல்லை அது உங்களுக்கு சரி பட்டு வராதென்றால், உங்களுக்கு ஆர்வமுள்ள ஏதோ ஒரு குழுவில்/வகுப்பில் சேருங்கள்.
தெரியாத நாட்டில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டு கொடுமைக்கு உள்ளாகும் பெண்களை பற்றி எத்தனையோ தகவல்கள் வந்தாலும், நமக்கு அது நிகழாது என்றே பெண்கள் எண்ணுகிறார்கள். தங்கள் திருமணம் எத்தனை இனிதாக இருந்தாலும், பல அறியாத புதுமைகளை ஒன்றாய் சமாளிக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் என்பது ஒரு உண்மை நிலை.
இது குறிப்பிடவே தேவை இல்லை, இருப்பினும் மணமான பெண் மாற்றான் சொத்து என்ற கருத்து ஆழமாக பதிந்திருக்கும் நம் நாட்டில், புதிதாய் மணமான பெண்கள் பிறந்த வீட்டாருடன் பேசுவதும் பழகுவதும் ஆதரிக்கப்படுவதில்லை. சில சமயங்களில் இது வெட்டவெளியாகவும், சில சமயங்களில் உன் “புதுக் குடும்பம்” தான் முக்கியமானது என்பதை காட்டுவது போல சூட்சமமாகவும் செய்யப்படுகிறது.
எனது தோழி ஒருத்தி புகுந்த வீட்டில் தன் காலை நீட்டியதற்காக கடிந்துகொள்ளப்பட்டாள். நான் அப்படியே காலை நீட்டுவது பற்றி சொல்ல வரவில்லை, ஆனால் ஓய்வெடுப்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தலையில்லா கோழியைப்போல் அங்கும் இங்கும் ஓடினாள் தான் மரியாதை கிடைக்கும் என்ற கதையை அப்படியே நம்பி விடுகிறோம். அது உண்மை அல்ல, கதையே. குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு எவ்வளவு ஓய்வு தேவையோ, அவ்வளவு உமக்கும் தேவை.
தனிக்குடும்பத்தில் கூட, எல்லா வீட்டு வேலைகளையும் பெண்களே ஓடிப்போய் செய்வதை நாம் பார்க்கிறோம். உங்கள் கணவருக்கு எதுவும் செய்ய தெரியாதென்றால் (நம் இந்திய ஆண்கள் வளர்க்கப்படும் விதத்தில் இது சாத்தியமே) அவரிடம் ஏன் அவர் கற்று கொள்ள வேண்டும், உங்களுக்கு ஏன் அது முக்கியமானது என்பதை பற்றி பேசவும். வீடு அலங்கோலமாக இருக்கிறதா, விட்டுவிடுங்கள், மற்றவர் அதை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வீட்டு வேலை என் சொத்து என்று ஆக்கி கொள்ள தேவை இல்லை!
உங்களால் இயன்றவரை சிறப்பாக செயல்படுங்கள், ஆனால் நீங்கள் நீங்களாக இருங்கள். என் கணவர் அசைவம் சாப்பிடுவார், நான் பிறந்ததிலிருந்து சைவம். என்னை அசைவம் ஆக்கி விடவேண்டும் இல்லாவிட்டால் குறைந்த பட்சம் அசைவம் சமைக்கவாவது சொல்ல வேண்டும் என்று எங்கள் திருமணத்திற்கு பிறகு ஏன் கணவரிடம் கூறுவோரின் எண்ணிக்கை என்னை ஆச்சரியபட வைக்கிறது. அதிர்ஷ்டவசமாக எங்கள் இருவருக்குமே அந்த என்னமே வினோதமாக தோன்றுகிறது.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால், திடிரென்று பூஜை புனஸ்காரங்கள் செய்யும் குடும்ப குத்துவிளக்காக மாராதீர்கள். காலப்போக்கில் அந்த பொய்யை உடைப்பது மிகவும் கடினமாகி விடும், மற்றவர்கள் ஏமாற்றபட்டதாகவே உணர்வார்கள். உங்களை நீங்கள் தலைகீழாக மாற்றிக்கொள்ளாமலேயே பிறருடன் உள்ள வேறுபாடுகளை மதிக்க இயலும்.
கவனிக்க: இருவருக்கும் எதில் உடன்பாடு இருக்கிறது என்பதை பற்றி கலந்து ஆலோசிப்பதில் ஆர்வம் காட்டும் ஆண்மகனை நீங்கள் மணந்திருக்கிறீர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் தான் இவை அனைத்தும் கூறப்பட்டுள்ளன. அப்படி இல்லாமல், தான் நினைப்பதே வேதம் – அட்ஜஸ்ட்மென்ட் என்பது பெண்களின் வேலை மட்டுமே என்று நடந்து கொள்ளுகிறாரென்றால் (கீழே உள்ள காணொளியை போல்), ஓடுங்கள்! தள்ளிப் பொட வெண்டாம், இப்பொழுதே ஓடுங்கள்.
Founder & Chief Editor of Women's Web, Aparna believes in the power of ideas and conversations to create change. She has been writing since she was ten. In another life, she used to be read more...
Please enter your email address