பெண்மையைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்த 3 படங்களும் ஒரு இனிய விருந்தே!

வீட்டில் இருந்தபடியே நீங்கள் இரசிக்க 3 வித்தியாசமான கதைக்களத்துடன் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் இங்கு சிபாரிசு செய்யப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே நீங்கள் இரசிக்க 3 வித்தியாசமான கதைக்களத்துடன் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் இங்கு சிபாரிசு செய்யப்படுகிறது.

கொரனா முழு அடைப்பு காலங்களில் அத்தியாவசிய தேவைகளின் பட்டியலில் தவறாமல் இடம்பெற்று விட்டது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சினிமாக்களின் அறிமுகம் இங்கே உங்களுக்காக.

வீட்டில் இருந்தபடியே நீங்கள் இரசிக்க 3 வித்தியாசமான கதைக்களத்துடன் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் இங்கு சிபாரிசு செய்யப்படுகிறது. சிறந்த கதையம்சம் நிறைந்த, அழகான உணர்வுகளைப்  பேசும் இந்த படங்கள், உங்கள் மனதை அள்ளும் என்பது நிச்சயம். 

படம்: ஓ பேபி (தமிழ், தெலுங்கு)

நடிகர்கள் – லட்சுமி, சம்ந்தா, நாக சூர்யா

(நெட்பிளிக்ஸ்)

ஒரு வயதான பெண்மணிக்கு, திடீரென இளமை வரம் கிடைத்தால் என்னாகும் என்பதுதான் கதையின் ஒன்லைன் முடிச்சு.

வயதான பெண்மணியான பேபி (இலட்சுமி), மகன், மருமகள், பேரன் மற்றும்  பேத்தியுடன் வசித்து வருகிறார். மகனிடம் அலாதி பிரியம். மகனின் ஷீ வை தன் புடவைத்தலைப்பால் துடைக்கும் பாசமிகு அம்மா, இசையில் நாட்டம் கொண்ட பேரனின் செல்ல பாட்டி. ஆனால் பாட்டியிடம் அதிகம் ஒட்டாத பேத்தி. எப்போதும் தன் சமையலை குறை சொல்லும் மாமியார் மீது மருமகளுக்கும் (பிரகதி) அலர்ஜி. 

ஒரு போட்டோ எடுக்க செல்லும் ஒருநாள் ஸ்டுடியோவுக்குள் செல்லும் இலட்சுமிக்கு, கடவுள் இளமை வரம் தருகிறார். வரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் இளமை துள்ளும் பேபி (சமந்தா) செய்யும் அலப்பறைகளே படத்தின் உயிர் நாடி.

இலட்சுமியின் இளமை பருவத்திற்கான உருவமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சமந்தா, அந்த பாத்திரத்திற்கு சிறப்பான தேர்வு. மனதளவில் ஒரு வயதான பெண்மணியாகவே இருப்பதால் ஒவ்வொரு அசைவிலும் முதியவளுக்கான உடல்மொழி காட்ட வேண்டிய சவாலான பாத்திரம். அதை அநாயசமாக கையாண்டிருக்கிறார் சமந்தா. 

தன் எளிமை மற்றும் அழகில் மயங்கி, தன்னை காதலிக்கும் விக்ரமிடம் (நாக ஷவுரியா) தன் நிலையை சொல்லவும் முடியாமல், அவரின் உண்மை நேசத்தை பகிரங்கமாக நிராகரிக்கவும் முடியாமல், திணறும் அந்த காட்சிகளில் மனதை அள்ளுகிறது சமந்தாவின் கேரக்டர். கோட்டிலிருந்து கொஞ்சம் விலகினாலும் படத்தின் அழகு குறைந்து விடும் என்ற நிலையில், நாக சூர்யாவின் காதலை நாசூக்காக கையாண்டிருக்கிறார் இயக்குநர் நந்தினி ரெட்டி.

பெண் இயக்குநர் பெண்களின் மனதை எளிதாகவே தொட்டிருக்கிறார். மிக்கி மே ஜேயரின் இசை உறுத்தலில்லாமல் மனதை வருடுகிறது. மொத்தத்தில் ஓ பேபி, ஒரு இனிய பொழுது போக்கிற்கு உத்தரவாதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

படம்: குயின் (இந்தி)

நடிகர்கள் – கங்கணா ரணாவத், லிசா ஹெய்டன், ராஜ்குமார் ராவ்

(நெட்ஃபிளிக்ஸ்)

கங்கணா ரணாவத் நடித்து 2013 இல் வெளிவந்த திரைப்படம். திருமணம் நடைபெறுவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் திடீரென பெரிதான காரணம் ஏதும் இன்றி திருமணத்தை நிறுத்துகிறார் மணமகன். காதலித்து மணம் புரிய கேட்டவன், திருமணத்தை நிறுத்தியதால் மனம் உடைந்து போகிறார் ராணி (கங்கணா).

தேன்நிலவுக்காக ஏற்கனவே திட்டமிட்டிருந்த பாரீஸ் மற்றும் ஆம்ஸ்டெர்டம் பயணத்திற்கு தனியாக போவேன் என அடம் பிடிக்கிறார் ராணி. சிறுதயக்கம் இருந்தாலும், அங்கு சென்றால் ராணிக்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என அவளுடைய பெற்றோரும் சம்மதிக்கிறார்கள்.

கட்டுப்பெட்டியாய் டெல்லியில் வாழ்ந்த ராணிக்கு, பாரீஸில் துணிச்சலான விஜயலட்சுமியின் (லிசா ஹெய்டன்) நட்பு கிடைக்கிறது. பின்பு ஆம்ஸ்டெர்டாம் செல்லும் அவளுக்கு அங்கு கிடைக்கும் நண்பர்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் அவளது வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன என்பதை மிக அழகாகவும் சுவாரஸ்யத்துடனும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

படம்: தரமணி (தமிழ்)

நடிகர்கள் – ஆன்டிரியா, வசந்த் ரவி

(நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம்)

இயக்குநர் ராமின் இயக்கத்தில் ஆன்டிரியாவின் நடிப்பில் வெளியான தரமணி, தமிழ் திரைக்களத்தில் ஒரு வித்தியாசமான (நிஜமாகவே!) படம்.  வேலைக்கு செல்லும், திருமணமாகிய ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள். கே (gay) ஆன கணவனை இயல்பாக புரிந்துகொண்டு தன் குழந்தையுடன் விலகும் மனைவியாக ஆன்டிரியா அருமையாக நடித்திருக்கிறார். 

தனித்து வாழ்வதாலேயே ஆண்களால் தவறாக பார்க்கப்படும் அவலம் தைரியமும் தெளிவுமாக வாழும் ஆன்டிரியாவின் கேரக்டர் மூலம் அருமையாக காட்டப்பட்டிருக்கிறது. காதல் காதல் என அவள் பின்னால் அலையும் ஹீரோ (புதுமுகம்), பின்பு சந்தேகப்படுவது, இருவருக்கும் ஏற்படும் மோதல்கள் அதில் ஆண்டிரியாவின் மகனுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்பு என பலமுகம் காட்டுகிறது கதைக்களம்.

“டாகில் (Dog) இல் என்ன நல்ல டாக், கெட்ட டாக் …டாக் இஸ் எ டாக், பிஸ்கெட் போட்டா போதும் “ என ஆண்டிரியாவின் உடன் பணிபுரியும் பெண் சொல்வது தமிழ் சினிமாவிற்கு புதிது. இத்தனை தைரியமாய் வசனமா என அதிரவைக்கிறது . 

பெண்களை மையமாகக் கொண்ட இந்த 3 படங்களுமே பெண்மையைக் கொண்டாடும் அனைவருக்கும் ஒரு இனிய விருந்தே!

About the Author

Akila Jwala

writer , poetess, educationist and social activist read more...

9 Posts | 16,334 Views
All Categories