பெரிதினும் பெரிது கேளென்றாய், பாரதி!

பாரதி என்று சொன்னாலே பரவுது ஞானத்தீ! மகாகவியின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு தீட்டிய கவிதை இங்கே.

பாரதி என்று சொன்னாலே பரவுது ஞானத்தீ! மகாகவியின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு தீட்டிய கவிதை இங்கே.

விட்டு விடுதலையாக வேண்டும் என்றாய் சிட்டுக்குருவியை
பார்த்து!
காற்று வெளியினில்
கண்ணம்மா என்றே
காதல் கவி படைத்தாய்!

உன் கண்ணில் நீர் வடிந்தால்
என உடையாளுக்கு
உதிரம் உதிர்த்தாய்!

மகுடம் அணிந்தாய்!ஐம்பொறி ஆட்சிக்கொள்ளென்றாய்!ரௌத்திரம் பழகச் சொன்னாய்!

தமிழனை தலைநிமிரச் சொன்னாய்!
வேடிக்கையே வாடிக்கையாக்காமல்
பெரிதினும் பெரிது கேளென்றாய்!

அடிமையாகிட்ட பெண்ணை
ஆணுக்கு பெண் இளைப்பில்லை
காண் என கண் திறக்க செய்தாய்!கற்பு இருபாலர்க்கும் பொதுவென்றாய்!

உன் மீசையை மனதில் நினைத்தே
இன்று ஜல்லிக்கட்டு போராட்டமும்
உயிர் பெறுகிறது!
உன் கவிதைகளிற் சீவனாய்
நீ இன்னும் எங்கள் கிட்டத்தில்!

About the Author

3 Posts | 3,406 Views
All Categories