மனிதாபிமானம் மனிதர்களிடையே மறந்துபோனதோ மரத்துப்போனதோ

"கருணையற்ற உன் செயலால் மானிடா நீ மிருகமாகிப் போனாயோ?" மனிதாபிமானம் எங்கே என்று கேட்கிறார், நம் வாசகி ரம்யா.

கருணையற்ற உன் செயலால்
மானிடா நீ மிருகமாகிப்போனாயோ?

மனிதாபிமானம் எங்கே என்று கேட்கிறார், நம் வாசகி ரம்யா.

வனவிலங்கு என்று யானைகளுக்கு பட்டம் சூட்டினாய்
வலிகளை தரப்போகிறேன் என்று எச்சரிக்க மறந்துவிட்டாய்
தீப்பந்தம் ஏந்தி நீ நின்றாயானால்
தீங்கின்றி அவைகளும் சென்றுவிடுமேயானால்

உணவை தேடி வீதியில் நடந்தது யானை ஒன்று
உனக்கு தருகிறேன் என்று தந்திரமாய் நின்று
கையில் பழத்துடன் பாவனை செய்தாய்
வைத்திருக்கிறேன் வெடியை என்று சொல்லாமல் போனாய்

வாஞ்சையோடு உண்ணப் போனது அந்த ஜீவன்
வலியில் துடிதுடித்து மரணித்து மாய்ந்தது அதன் ஜீவன்
இன்னுமொரு இடத்தில் அமைதியான இரவில்
இன்னலின்றி யானை ஒன்று வந்தது தனிமையில்

தேய்ந்த வட்டையில் பற்ற வைத்தாய் தீயை
தேவையின்றி அதனை மதில் தாண்டி வீசினாய்
மூன்று மாத காலங்கள் வேதனையில் வாழ்ந்தது
முயற்சிகள் யாவும் பலன் தராமல் மடிந்தது

கதறி அழ முடியாத உயிரினத்திடம்
உன் வீரத்தை  காட்டுவாயோ
கருணையற்ற உன் செயலால்
மானிடா நீ மிருகமாகிப்போனாயோ?!

About the Author

13 Posts | 18,058 Views
All Categories