பெண் தெய்வங்கள்

பெண்ணுக்கு கனவு காணும் உரிமை உண்டா? இல்லையெனில், யார் வகுத்தது யார் வகுத்தது அவளை முடக்கும் புனித பிம்பங்களை, பெண்ணுக்கான எல்லைகளை?

பெண்ணுக்கு கனவு காணும் உரிமை உண்டா? அவளுக்கென்று ஆசைகள் வளர்க்கும் தகுதி உண்டா? ஆமெனில் அதன் எல்லை எது வரை? இல்லையெனில், யார் வகுத்தது அவளை முடக்கும் புனித பிம்பங்களை, பெண்ணுக்கான எல்லைகளை?

அவளுக்கு
வானம் தொட்டுவிட
ஆசை.

ஒவ்வொரு கல்லாய்
ஒன்றன்மீது ஒன்றாய்,
அடுக்கடுக்காய்,
படிகள் கட்டிச் சென்றாள்.

கோபுரம் உயர உயர,
அவள்
சக்தி உணர்ந்து,
கோபுரத்தை
கோவிலாய்
பாவித்து,
அவளையே உள்ளே
அடைத்தனர்.

கோயில்
கருவறைக்குள்
விண்மீன்களின் நிழலாய்
ஒரு பெண் தெய்வம்.
காற்றழுத்தத் தாழ்வு
மண்டலங்களாய்
அவள் உணர்ச்சிகள்
மாமழையாய் கொட்டித் தீர்த்து,
அமைதியாய்
அடங்கிவிடுகிறது
ஏங்கும் இதயத்துடன்.

பெண் தெய்வங்கள் –
தெளிந்த கனவுகள்
தடயமின்றி
போன
தடங்கள்.

பட ஆதாரம்: ‘Parched’ திரைப்படம்

About the Author

Dhevapriya R J

An Interior Designer by profession and a Calligrapher, Voiceover artist, Content writer by passion. read more...

4 Posts | 8,819 Views
All Categories