உங்கள் குழந்தையை சாத்தியமான கொவிட்-19 மூன்றாம் அலையிலிருந்து பாதுகாக்க நீங்கள் செய்யக்கூடிய 10 விஷயங்கள்

கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து பரவி கொண்டிருப்பதால், குழந்தைகள் கண்ணனுக்கு தெரியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். சாத்தியமான மூன்றாவது அலையிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்ப்போம்!

கோவிட் -19 தொற்றுநோய் தொடர்ந்து பரவி கொண்டிருப்பதால், குழந்தைகள் கண்ணனுக்கு தெரியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். சாத்தியமான மூன்றாவது அலையிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்ப்போம்!

Original in English

மாறிவரும் சூழலில் கொரோனா வைரஸ் பாதிப்பும் உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியபோது, ​​ நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அந்த நேரத்தை பிஸியான வாழ்க்கையிலிருந்து ஒரு இடைவெளி போல செலவிட்டோம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி மெதுவாக ஒரு தொற்றுநோயாக உருவானபோது, ​​எதையும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அது நம்மை எச்சரித்தது.

நம் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க இந்த தொற்றுநோய் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. இப்போது மூன்றாவது அலை கொரோனா வைரஸ் செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையே வர உள்ளது, இது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் அனைத்து பெற்றோர்களின் மனதிலும் எழும் முதல் கேள்வி, கொரோனா வைரஸின் மூன்றாவது அலையிலிருந்து தங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாக்க இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

1) உங்கள் குழந்தைகள் அல்லது நீங்கள் குழந்தைகளுடன் வெளியில் விளையாடும்போது, ​​முதலில் வீட்டிற்கு வந்த பிறகு, மாலையில் உணவிற்கு முன்பும், இரவு உணவிற்கு முன்பும் கைகளை கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுங்கள்.

2) உங்கள் உணவில் பச்சை காய்கறிகளான கேப்சிகம் (குடைமிளகாய்), பூசணி, வெண்டைக்காய், பீன்ஸ், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி, வெங்காயம் போன்றவற்றைச் சேர்க்கவும். பழங்களில் தர்பூசணி, வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி மற்றும் பருப்பு வகைகளில் பாசிப்பயறு, சிவப்பு காராமணி, வெள்ளை கொண்டைக்கடலை, சிவப்பு பருப்பு, முட்டை மிகவும் ஊட்டத்தை கொடுக்கிறது. இதில் வைட்டமின் சி, புரதங்கள் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

3) முடிந்தவரை துரித உணவை கொடுக்காதீர்கள். அவை செரிமான அமைப்பை பாதிக்கலாம். குழந்தைகள் அதைக் கேட்டால், அவற்றிற்கு பதில் உருளைக்கிழங்கு தின்பண்டங்கள், உப்மா, தோக்லா, வறுத்த வேர்க்கடலை அல்லது அவல் செய்து கொடுங்கள்.

4) குழந்தைகளுக்கு இருமல் அல்லது சளி வரும்போதெல்லாம், டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுங்கள் மற்றும் லேசான சளி மற்றும் இருமல் இருக்கும்போது மட்டுமே சிகிச்சையளிக்கவும். அவர்களுக்கு சொட்டு மற்றும் மூலிகை தேநீர் கொடுங்கள், அதனால் சளி மற்றும் இருமல் கட்டுப்படுத்தப்படும்.

5) உங்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். தினமும் காலையில் குறைந்தது ஒரு மணிநேரம் குழந்தைகளை உடற்பயிற்சி மற்றும் எந்த விதமான விளையாட்டுகளுக்கும் ஊக்குவிக்கவும். நீங்களே அவர்களுடன் விளையாடுங்கள். இது குழந்தைகளுக்கு ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் பெற்றோருடன் நேரத்தை செலவிட உதவுகிறது.

அதே நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அவர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

6) இரவு உணவிற்குப் பிறகு குழந்தைகளை டிவி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.

மாறாக, வேறு ஏதாவது வேலையில் அவர்களை பிஸியாக வைத்திருங்கள். எந்தவொரு குறிப்பிட்ட தலைப்பிலும் அவர்களுடன் பேசுவது, சதுரங்கம், லுடோ, கேரம், பிஸ் விளையாட்டு போன்ற உட்புற விளையாட்டுகளை கற்றுக்கொடுக்கவும்.

7) குழந்தைகளின் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களைச் சேகரித்து, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும்.

8) குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதால் அவர்களின் கண்கள், காதுகள் மற்றும் மூக்கைத் தொடாதபடி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும்.

9) குழந்தைகளை வீட்டில் இருக்க ஊக்குவிக்கவும். கொரோனா வைரஸ் காரணமாக இந்த காலகட்டத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குங்கள். அவர்களுக்கு சீரான உணவு, ஆரோக்கியமான சிற்றுண்டி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மற்றும் உங்கள் நேரத்தை கொடுங்கள்.

10) குழந்தைகளுக்கு கொரோனா பற்றி கற்றுக்கொடுங்கள், அவர்களிடம் பேசுங்கள், அவர்களின் மனதில் உள்ள எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் மற்றும் கொரோனா வைரஸுக்கு பயப்பட வேண்டாம் என்று கற்பிக்கவும். அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொள்ள இது அவசியம்.

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்.

பட உதவி: அன்ஸ்ப்ளாஷில் இஸி பார்க்

About the Author

Author Urvashi Vats

I am Urvashi Vats an Author, Poet, Certified Life Coach & a Motivational Speaker. I have my own online shopping store Kasturi Lifefestyle & have my own initiative as Kasturi Life Coaching Services. read more...

1 Posts | 1,371 Views
All Categories