நீ எனக்கு உலகத்தை வழங்கியிருக்கலாம், ஆனால் நான் என் சுதந்திரத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன்

'ஆமா அவங்க செய்றங்க ஏன்னா அது அவங்க விருப்பம். இது என்னோட விருப்பம் இல்ல. '" என்னோட " என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கவனிக்க அவனுக்கு போதுமான உணர்திறன் இல்லை என்று அவளுக்குத் தெரியும்.

“அது என்ன? இந்த முடிவை எடுக்க உன்ன எது கட்டாயப்படுத்துது?”

அவள் அவனிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். அவள் ஆழ்ந்த மூச்சை எடுத்தாள்.

“என்னால நான்-வெஜ்ஜ விட்டுவிட முடியாது.” அவளது முகம் உறுதியாக, அவளுடைய தொனி தீர்க்கமாக இருந்தது.

“என்னால முடியாது.”

அவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான். அவர்கள் சந்தித்த எல்லாவற்றிற்கும் பிறகு, அவள் இதை எப்படி செய்ய முடியும்? அவள் அதை எப்படி கருத்தில் கொள்ள முடியும்? அவள் கிண்டல் செய்ய அப்படி சொல்கிறாள். அவள் நகைச்சுவையாக அதை சொல்லியிருக்க வேண்டும்.

Original in English 

“நீ என்ன கேலி செய்றயா?” என்று அவன் அவளிடம் கேட்டான், அவள் சிரிப்பின் உச்சியில் வெடித்து கிண்டல் செய்வதற்கு தான் என்று கூறுவாள் என்று உறுதியாக எண்ணினான். ஆனால் அவள் சோகமாக தலையை அசைத்து பெருமூச்சு விட்டாள்.

“நானும் அப்படி சொல்லலாம்னு நினைக்குறேன் ஆனா இல்ல.”

“நீ எத பத்தி பேசுற? எனக்கு புரியல”

உண்மை என்னவென்றால், புரிந்துகொள்ளாதது அவன் மட்டும் அல்ல. இப்போது அவனைப் பார்த்தாலும், மக்கள் ஆச்சரியப்படுவார்கள், கேள்விகளைக் கேட்பார்கள், புருவங்களை உயர்த்துவார்கள் என்று அவளுக்குத் தெரியும். அவளுடைய சொந்த குடும்பம் கூட அவளுடைய முடிவை கேள்விக்குள்ளாக்கும். அவன் அழகானவன், வெற்றிகரமானவன், அவன் அவளை நேசித்தான். அவன் ஒரு பரிசாகவே கருதப்பட்டான். எந்த முட்டாளும் அதைப் பார்க்க முடியும். ஆனால் அவள் ஒரு முட்டாள் அல்ல. அதன் அர்த்தம் அவளுக்குத் தெரியும். அது தவிர்க்க முடியாமல் எங்கு செல்லும் என்றும் அவளுக்கு தெரியும்.

“மன்னிச்சுரு, என்னால முடியாது.”

“உன்னால என்ன முடியாது?” அவன் அவளை அவநம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டே இருந்தான். “மரைன் டிரைவில் 3 மாடி, கடலோர பங்களாவில் வாழ முடியாதா? உன்ன உண்மையா வணங்கி அன்பா பாத்துக்குற ஒரு மனுஷன் கூட உன்னால வாழ்நாள் முழுசா அன்பா இருக்க  முடியாதா? இதோ நான் உனக்கு உலகத்தையே குடுக்குறேன், உன்னால முடியாதுனு சொல்லுற!”

ஆமாம், நிச்சயமாக அவன் அவளுக்கு உலகத்தை வழங்கினான் ஆனால் அவளின் பார்வையில், அது மிகவும் வரையறுக்கப்பட்ட உலகம்.

இப்போது அவன் உண்மையிலேயே புதிராக இருந்தான். “உன்னால நான்-வெஜ்ஜ  விட்டுவிட முடியாது? அதுக்கு பதிலாக நீ விரும்புர ஒருத்தர நீ விட்டுவிட முடியுமா?”

“நா நேசிப்பவர் என்ன ஏத்துக்க மாட்டார். அவர் என்ன நானே தேர்வு செய்ய விடமாட்டார்.

‘நீ எப்படி இருக்கிறீயோ அப்படியே நா உன்ன ஏத்துக்கிறேன். இது நீ சாப்பிடுற ஒன்று.”

‘இது நா சாப்பிடுறது மட்டுமில்ல. இது நா யாருன்ற ஒரு பகுதி. ‘

‘இது வெறும் நான்-வெஜ்!’ அவன் கைகளை விரித்தான். ‘நெறைய மக்கள் அதை விட்டுவிடுறாக.’

“ஆமா அவங்க செய்றாங்க ஏன்னா அது அவங்க விருப்பம். இது என்னோட விருப்பம் இல்ல.” ‘என்னோட’ என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கவனிக்க அவனுக்கு போதுமான உணர்திறன் இல்லை என்று அவளுக்குத் தெரியும்.

‘ரொம்ப சிலரே குடுக்க முடியுறத நா உனக்கு குடுத்துட்டு இருக்கேன்னு உனக்கு தெரிலயா?’

ஒப்புக்கொள்ள குறைந்தபட்சம் அவள் நேர்மையானவள். “ஆமா எனக்கு தெரியும்” என்று அவள் அவனுடைய கேள்விக்கு பதில் சொன்னாள். “நீ எனக்கு வசதியான வாழ்க்கையை தருவ, சிறந்த ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குவ, உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல்களில் உள்ள ஃபேன்சி ரெஸ்டூரண்ட்க்கு கூட்டிட்டு போக முடியும்னு எனக்கு தெரியும். ஆனாலும், நான் அந்த உடைகள் மற்றும் நகைகள் எல்லாத்தையும் போட்டுட்டு, நா அந்த ரெஸ்டூரண்ட்க்கு போகும் போது, ​​ எனக்கு பிடிச்சதை என்னால சாப்பிடமுடியாலான எனக்கு சந்தோஷமாக இருக்காது. “

“உனக்கு உணவு அவ்வளவு முக்கியமா?” இது உண்மையில் நடக்கிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவள் அவனை விட இறைச்சியைத் தேர்ந்தெடுத்தாள் என்று.

அவள் சிரித்தாள். “இது என்ன நா தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றி.”

அவன் நடையை மாற்றினான். “ஆனால் நீ என்ன நேசிக்கலயா?” எதிர்பார்த்த உணர்ச்சிகரமான கோணம். அவள் மீண்டும் சிரித்தாள்.

“நான் உன்னை காதலிப்பது உனக்கு தெரியும். நான் சாப்பிட்டு வளர்ந்த சுவையான பர்கர்கள் மற்றும் பட்டர் சிக்கன் மற்றும் மட்டன் கேபாப்களையும் விரும்புகிறேன். அதையெல்லா ஏன் விட்டுக்கொடுக்கணும்னு எனக்குப் புரியல.”

“ஆனால் காதல்னா தியாகம் செய்யுறது தான.” இப்போது அவன் முகம் மிகவும் விரும்பத்தகாத ஒரு அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் இருந்தது.

காதலும் மற்றவரை சுதந்திரமாக இருக்க விடுரது. தவிர, இன்று நம் 75 வது சுதந்திர தினம். ஒரு சுதந்திர நாட்டின் சுதந்திரப் பெண்ணா, என்ன தீர்மானிப்பதற்கும் தேர்வு செய்றதுக்கும் என் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லனு உனக்கு சொல்ல இது நல்ல நாளா இருக்கும்னு நெனச்சேன்.”

அதனுடன், அவள் தன் பையை எடுத்து அவனிடமிருந்து விலகினாள். அவள் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் மனம் மாறுவதற்காக, திரும்பி திரும்பி அவனிடம் வருவதற்காக அவன் காத்திருந்தான். இது வெறும் நான்-வெஜ் தான் என்று நினைத்தான்! தெரு முனையில் உள்ள சங்கி சிக்கன் சாப்ஸ் உணவகத்திற்குள் வேண்டுமென்றே அவளது நடைப்பயணத்தைப் பார்த்தபோதுதான், அவள் நிச்சயமாக திரும்பி வரவில்லை என்பது அவனுக்குத் தெரியும்.

பட ஆதாரம்: ஓச் என்ற குறும்படத்திலிருந்து ஒரு ஸ்டில்

About the Author

Rrashima Swaarup Verma

Rrashima is a senior corporate analyst with over 20 years of experience in the corporate sector. She is also a prolific writer, novelist and poet and her articles, stories and poems are regularly published in read more...

1 Posts | 1,220 Views
All Categories