பெண்களுக்கு சுத்தமான கழிப்பறைகள் ஏன் இந்தியாவில் கடைசி தேவையாக இருக்கிறது?

ஸ்டார்ட்-அப்களுடன் மற்றும் பல நிறுவனங்களுடன் அதிகமாக பெண்கள் வேலைக்குச் சேரும்போதும் சுத்தமான, சுகாதாரமான பெண்கள் கழிப்பறைகள் இருப்பது அவசியம்-நாம் எப்போது உணரப்போகிறோம்?

ஸ்டார்ட்-அப்களுடன் மற்றும் பல நிறுவனங்களுடன் அதிகமாக பெண்கள் வேலைக்குச் சேரும்போதும் சுத்தமான, சுகாதாரமான பெண்கள் கழிப்பறைகள் இருப்பது  அவசியம்-நாம் எப்போது உணரப்போகிறோம்?

Original in English 

வேலை செய்யும் பெண்ணாக எனது மிகப்பெரிய கவலை என்னவென்றால் அலுவலகங்களில் உள்ள சுகாதாரமற்ற அல்லது யூனிசெக்ஸ் கழிவறைகள் தான்.

புரிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களது தற்போதைய நிதி நிலைக்கு பொருந்தக்கூடிய அலுவலக அமைப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆயினும்கூட, ஒரு பெண் பணியாளருக்கு, சுகாதாரம் இல்லாத நிலையில் தங்களின் முழு திறமையுடன் வேலை செய்வது சிரமமாகிறது.

பெயர்சொல்லும் நிறுவனங்களின் பணியிடங்களில் கூட சுத்தமான பெண்கள் கழிப்பறை இல்லை 

கார்ப்பரேட் உலகில் நான் பணியாற்றிய காலத்தில், விளம்பர களத்தில் புதிய வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இது எனக்கு நிறைய கார்ப்பரேட்களை சந்திக்கும் ஒரு நம்பமுடியாத வாய்ப்பை அளித்தது. இங்கு நன்கு நிறுவப்பட்ட மற்றும் வரவிருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் மும்பை மற்றும் மேற்கு இந்தியாவில் தலைமையிடமாக கொண்டிருந்தன.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நான் செய்த வாடிக்கையாளர் வருகைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான் உணர்ந்த முடிவு என்னவென்றால், தூய்மை இல்லாத, மற்றும் பெண் பணியாளர்களுக்கான சுத்தமான பெண்கள் கழிப்பறைகளுக்கு குறைந்த முன்னுரிமை அவர்களால் வழங்கப்பட்டது.

ஒரு நிறுவனத்தின் நிதி நிலை மற்றும் மனிதவளக் கொள்கைகளை அளவிட, ஒரு நிறுவனத்தின் நிதி ஆரோக்கியத்தின் விரைவான முன்னோட்டத்தைப் பெற அதன் கழிவறைக்குச் சென்று பாருங்கள். பராமரிக்கப்படும் சுகாதார நிலை கிட்டத்தட்ட நேரடியாக அதன் இருப்புநிலைக் குறிப்பின் ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டும். இது நான் முயற்சி யோசித்து செய்த ஒரு கோட்பாடு. 

பின்குறிப்பு:. உங்கள் அடுத்த பிசினஸ் மீட்டிங் அல்லது நேர்காணல் அழைப்பின் போது இந்த கோட்பாட்டை நீங்கள் நடைமுறையில் பயன்படுத்தலாம்.

மும்பை உட்பட சில நகரங்களில் (இது இந்தியாவின் வணிக/ நிதி மூலதனமாகவும் உள்ளது) என்னுடைய அனுபவம் என்னவென்றால் கழிப்பறைகள் பெரிய நகரத்தில் இந்த சூழ்நிலை என்றால்; சிறிய ஊர்களில் பணிபுரியும் பெண்களின் அவல நிலையை கற்பனை செய்யும் போது ஒருவருக்கு எளிதில் ஆழ்ந்த வெறுப்பு உருவாகக்கூடும்.

தனிநபர்களை நியமிக்கத் திட்டமிடும் போது ஒரு நிறுவன நிர்வாகம் ஒரு முதன்மை மனித தேவையை எப்படி வசதியாக மறந்துவிடுகிறது என்பது முரண்பாடானது.

அழுக்கான, மோசமாக பராமரிக்கப்படும் கழிவறைகளுடன் மனிதாபிமானமற்ற நிலையில் வேலை செய்யும் பெண்களின் நிலைமைகள்

என்னதான் ஆணுக்கு பெண் சமம் என்றாலும் பாலினங்களுக்கிடையேயான அடிப்படை உயிரியல் வேறுபாட்டை ஒருவர் மறுக்க முடியாது. நல்ல, சுகாதாரமான பெண்கள் கழிப்பறைகளின் தேவை உள்ளது. ஏனெனில் பெண்களின் உடற்கூறியல் கட்டமைக்கப்பட்ட விதத்தில், அவர்கள் இயற்கையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் எளிமையாக நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள்.

நான் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் என் பணி வாழ்க்கையைத் தொடங்கினேன். இது நமது தேசத்தின் மிகப்பெரிய கூட்டமைப்பின் ஒரு துணை நிறுவனமாக இருந்தது. தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் மக்கள் அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும், அத்தியாவசிய வணிக பணிகள் நடந்த கிளை மட்டங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அழுக்கு கழிப்பறைகளைக் கொண்டிருந்தது.

கிளைகளில் உள்ள தங்கள் ஆண் சகாக்களுடன் ஒப்பிடுகையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் பன்மடங்காகிறது. அலுவலக கழிவறைகளை பயன்படுத்துவது  கூட கடினமாக இருக்கிறது.

அவர்களில் சில பெண்கள் ஆரம்ப காலங்களில் தங்களின் பீரியட் நாட்களில் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்தார்கள். மற்றும் சிலர் சரியான அப்புறப்படுத்தும் அமைப்பு இல்லாததால் அலுவலக நேரத்தில் தங்கள் சானிட்டரி பேட்களை மாற்றமுடியாமல் இருந்திருக்கிறார்கள். சிலர் கழிப்பறை இடைவெளிகளை எடுப்பதை முற்றிலும் தவிர்த்தனர். ஒரு சிலர் வேலை செய்யும் போது தண்ணீர் உட்கொள்வதையும் கட்டுப்படுத்தினர்.

பெண்களின் அழுக்கு கழிப்பறைகளால் வழிவகுக்கும் நோய்த்தொற்று சதவீதங்களைப் பாருங்கள்

இத்தகைய மனிதாபிமானமில்லாத சூழ்நிலையில் ஒருவர் எவ்வாறு சரியான விடாமுயற்சியுடன் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

எப்படி நல்ல சுகாதாரம் என்பது தலைமை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது – மேலும் இது பல நிறுவனங்களுக்கு உண்மையாக உள்ளது! பெரும்பாலான நடுத்தர நிறுவனங்கள் சுகாதாரத்தை புறக்கணிக்கின்றன. இதனால் அவர்களின் பெண் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்று என் நண்பர்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.

புள்ளிவிவரங்களின்படி, 50% க்கும் அதிகமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் (UTI) பாதிக்கப்படுகின்றனர், அது மீண்டும் வருவதற்கான 30-40% வாய்ப்பு உள்ளது. மேலும், நான்கு பெண்களில் மூன்று பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கருபப்பை பாதையில் ஈஸ்ட் தோற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்ச்சியான UTI சிறுநீரக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும், மேலும் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், அது உயிர்களைக் கூட இழக்க செய்கிறது. கூடுதலாக, போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளாமல் இருப்பது சிறுநீரக கற்களை ஏற்படுத்தி, செரிமான பிரச்சனைகளை தூண்டும். நீண்ட காலமாக பிறப்புறுப்பு சுத்தத்தை புறக்கணிப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அல்லது பிற ஆபத்தான உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

பணியிடங்கள் எப்போது எழுந்து துர்நாற்றத்தை உணரும்?

இந்த புள்ளிவிவரங்கள் பொது களத்தில் எளிதாகக் கிடைத்தாலும், நிறுவனங்கள் சுகாதாரமான கழிவறைகளைப் பராமரிப்பதில் ஒரு தெளிவான அணுகுமுறையைக் கொண்டுள்ளன. ஒருவேளை, கழிப்பறைகளுக்குள் மிகக் குறைந்த நேரம் செலவழிக்கப்படுவதால், அது அதன் ஊழியர்களுக்கு ஒரு பெரிய செயலாக இருக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும். துரதிருஷ்டவசமாக, அவர்களின் கவனக்குறைவு அதன் பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

ஒரு நிறுவனத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், பணியிடத்தில் சுகாதாரமான கழிவறைகளைப் பராமரிப்பதற்கான சில சாத்தியமான தீர்வுகளை பரிந்துரைகள்:

  • கழிப்பறையின் கதவு மற்றும் சுவர்களில் கழிவறை ஆசாரம் சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்களை ஓட்டுவது கழிப்பறையை அடுத்து வரும் நபருக்கு சுத்தமாக வைத்திருக்க நினைவூட்டலாக பயன்படுத்தலாம்.
  • பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு வெளிப்படையான கலந்துரையாடலை ஏற்படுத்துதல், பயிற்சி மற்றும் வழக்கமான மெயிலர்கள் மூலம் ஊழியர்களை வழி நடத்தவும்.
  • நிறுவனங்கள் தங்கள் மனிதவளக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக கழிவறை உள்-சுகாதாரத் தணிக்கைகளையும் சேர்க்கலாம்.

மேலே விவாதிக்கப்பட்ட சில குறிப்புகள் வேலை செய்தால், ஆரோக்கியமான அமைப்பை உருவாக்க உதவும்.

இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு மதிப்புமிக்க சிந்தனையை பகிர்ந்து கொண்டு முடிக்க விரும்புகிறேன்.

இந்திய அரசு தொடக்க நிறுவனங்களை ஊக்குவிப்பது மற்றும் தன்னம்பிக்கை இந்தியாவை கற்பனை செய்வது பற்றி குரல் கொடுத்து வருகிறது. எனவே, நட்பான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வேலை கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிப்பது ஒரு தொழில்முனைவோரின் பொறுப்பாகும்.

எனவே, பெண் ஊழியர்கள் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இயற்கையாகவே பெண்கள் நேர்மையானவர்களாகவும், வளர்ச்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் அடிக்கடி வேலை மாற்று செய்ய விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள். நிறுவன ஏணியில் செழித்து வளர, செயல்படுத்துவதற்கு மற்றும் நகர்த்துவதற்கான அடிப்படை வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஒருவர் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், பணியாளர்களுடன் சேர இன்னும் நிறைய ஊக்குவிக்க முடியும்.

அனைவருக்கும் தூய்மையான மற்றும் ஒழுக்கமான பணிச்சூழலை வழங்குவதன் மூலம் தூய்மை பாரதத்தை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம். அலுவலகங்களில் சுத்தமான, சுகாதாரமான பெண்கள் கழிவறைகள் இருப்பதை உறுதி செய்வோம்.

இந்த கட்டுரை முதலில் இங்கு வெளியிடப்பட்டது.

 பட ஆதாரம்: YouTube

About the Author

Vijeta Harishankar

Finance professional,an avid blogger. I write to keep the child in me happy and contented. Contributing author of the poetry anthology Nyctophilia.Children's book Airavata and The Femme of Animal Kingdom. read more...

1 Posts | 1,002 Views
All Categories