Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மன அசதியை எதிர்கொள்கின்றனர். உடல் வலி, வயிற்று வலி, கால் வலி மற்றும் குமட்டல் இருப்பது போல் அசோகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவற்றிற்கு என்ன காரணம் மற்றும் அவற்றை எவ்வாறு கையாடலாம் என்று சில குறிப்புக்கள் இந்த கட்டுரையில் உள்ளன.
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் தங்கள் கர்பப்பையிலுள்ள முட்டைகள் கருவுற தயாராக உள்ளது. கருவூட்டல் நடக்கவில்லை என்றால், முட்டை இறுதியில் கர்பப்பை வழியாக வெளியேற்றப்படும். கருப்பை, இரத்தம் மற்றும் திசுக்களின் உட்பகுதியுடன் முட்டைகளை உடலில் இருந்து வெளியேற்றும். இதனால் இரத்தப்போக்கு சராசரியாக 3-6 நாட்கள் வரை நீடிக்கும்.
மாதவிடாய் சுழற்சியின் காலம் மாதவிடாய் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து அடுத்த மாதவிடாய் வரும் நாள் வரை கணக்கிடப்படுகிறது. வயது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி 21 முதல் 40 நாட்கள் வரை இருக்கும். ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிடாய் வரும்போது ஆரோக்கியமான சுழற்சி இருப்பதை உறுதி செய்யலாம். மேலும் ஒரு பெண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் சுழற்சியின் போது தேவையான ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்கிறது. பொதுவாக 21 நாட்கள் சுழற்சி உடைய பெண்களுக்கு ஒரு மாதத்தில் இரு முறை மாதவிடாய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனினும் இது கவலைக்குரிய விஷயம் அல்ல.
பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மன அசதியை எதிர்கொள்கின்றனர். உடல் வலி, வயிறு வலி, கால் வலி மற்றும் குமட்டல் இருப்பது போல் அசோகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
நமது கர்பப்பை மாதவிடாயின்போது அதன் உட்பகுதியான எண்டோமெட்ரியம் எனப்படும் உள்வரி ஜவ்வினை வெளியே ரத்தமும் சதையுமாக தள்ளுகிறது. இதனால் உடலில் அசோகரியம் ஏற்படுகிறது. “பொதுவாக கூறப்படும் வயிறு வலி மற்றும் உடல் வலிக்கு வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளுவதில் தவறொன்றும் இல்லை. அது எந்த வித பக்க விளைவையும் கொடுக்காது. எனினும் உங்களது அன்றாட வேலைகளை செய்யமுடியாத அளவிற்கு வலி இருந்தால் நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகவேண்டும். ரத்தப்போக்கு அதிகமா இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்த செயலக இருக்கும்,” என்று கூறுகிறார் dr_ cuterus என்று இன்ஸ்டாகிராமில் அழைக்கப்படும் டாக்டர் தானயா நரேந்திர.
சில சமயங்களில் பெண்களுக்கு மாதம் இருமுறை மாதவிடாய் வரும். சிலநேரங்களில் சிலரது மாதவிடாய் சுழற்சியால் அப்படி வர நேரிடும். அனால் ஒரு பெண் அனீமிக்காக (ரத்தசோகை) இருந்தால் மாதவிடாய் சீரற்று வரலாம்.
அதே போல் ஒரு பெண்ணிற்கு சீரற்ற மாதவிடாய் இருந்தால் மருத்துவரை அணுகுவது சிறந்த செயலாகும். PCOS (பாலி சிஸ்டிக் ஓவரியேன் சின்ரோம்) எனப்படும் ஒரு குறைபாடு சீரான மாதவிடாய் வருவதை தடுக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட உணவு மற்றும் மருத்துவ உதவியுடன் PCOSஐ நீங்கள் கட்டுக்குள் வைக்கலாம்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாயின் பொது செய்யக்கூடாதவை என்று பல விஷயங்கள் கூறப்படுகின்றன. அதில் பெரும்பாலானவற்றிக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இல்லை.
மாதவிடாய் காலத்தில் முதல் மூன்று நாட்களுக்கு தலைக்கு குளிக்க கூடாது என்பது ஒரு தவறான தகவல் பரவி வருகின்றது. இதனை உறுதி செய்ய எந்த விதமான அறிவியல் பூர்வ தகவல் இல்லை.
புளிப்பு சுவை உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது என்று கூறப்படும் செய்திக்கும் அதை உறுதி செய்யும் அறிவியல் பூர்வ ஆராய்ச்சிகள் இல்லை.
கோயிலிற்கு செல்லக்கூடாது, சமையல் அறையினுள் நுழையக்கூடாது, தண்ணீர் அல்லது ஊறுகாய் டப்பாக்கள் எதையும் தொட கூடாது, தனியாக இருக்கவேண்டும் போன்ற நடைமுறை சொல்லை நிரூபிக்க எந்த விதமான அறிவியல் பூர்வமான செய்திகளும் கிடையாது. மாறாக, இது பெண்களை முடக்கும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது.
மாதவிடாயின் போது சரியான சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒருமுறை சானிட்டரி நாப்கின் அல்லது டேம்பனை மாற்றவும். ஒருவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால், அதை இரண்டு மணி நேர இடைவெளியில் அல்லது ஓட்டத்தின் படி மாற்றுவது கட்டாயமாகும்.
நல்ல தரமான டேம்பன் அல்லது நாப்கின் பயன்படுத்துவது அவசியம். டிஎஸ்எஸ் (டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்) ஏற்படக்கூடும் என்பதால் துணிகளை உபயோகிக்க வேண்டாம். TSS என்பது ஒரு பாக்டீரியா தொற்று மற்றும் அந்த பாக்டீரியாக்கள் உடலில் நச்சுகளை உற்பத்தி செய்வதற்கு காரணமாகும். தற்போது மென்ஸ்டுரல் கப் எனப்படும் மருத்துவ தர சிலிக்கான் கப் பிரபலமாகி வருகிறது. இது உபயோகிக்க எளிமையாகவும், சுற்றுசூழலை பாதுகாக்கவும் உதவுகிறது.
கிராமப்புற மற்றும் வளரும் நாடுகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். மாதவிடாய் வெட்கக்கேடானது அல்ல என்பதை பெண்கள் புரிந்துகொள்ள விழிப்புணர்வை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கவேண்டும்.
read more...
Please enter your email address