Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
வீட்டு கேட்டரிங் வணிகம் பல பெண்களுக்கு ஒரு நல்ல தொழில் முனைவோர் விருப்பமாக இருக்கிறது. இந்த பிசினஸில் இருக்கும் மூன்று பெண்கள் நமக்கு சில உத்வேகம் மற்றும் எளிமையான குறிப்புகளை தருகிறார்கள்.
Original in English
சமையல் எப்போதும் பாரம்பரியமாக பெண்களுக்கு ஒத்ததாக இருக்கிறது. சிறிய அளவிலான வணிகங்களில், பெண்கள் பெரும்பாலும் வீட்டு கேட்டரிங் வணிகத்தை தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமில்லை. தங்கள் கற்றுக்கொண்ட தொழில் முறைகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் மற்றும் ஆதரவுடன் நுழைந்த பெண் தொழில்முனைவோர், பொதுவாக தங்கள் வணிகத்தை பெரிய அளவில் வளர்ப்பதில் சிறப்பாக செயல்படுவார்கள்.
உத்வேகமுடன், வளர்ந்து வரும் கேட்டரிங் வணிக உரிமையாளர்களுக்கான தங்கள் செய்து கற்றுக்கொண்ட அறிவுரைகள் மற்றும் உதவிக்குறிப்புகளை மூன்று பெண் வீட்டு கேட்டரிங் தொழில் முனைவோர்கள் பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த தீபா சஜி செரியன், தீபாஸ் மலபார் கிட்சன் மூலம் (இணைப்பில் தொடர்பு கொள்ளவும்) தொகுப்பு மெனுக்கள் (சைவம் மற்றும் அசைவம்) அடிப்படையில் உணவு ஆர்டர்களை எடுத்து, குடும்ப நிகழ்வுகள், பார்ட்டிகள் போன்றவற்றிற்கு செய்துவருகிறார்.
மற்றொரு வீட்டு உணவு வழங்குபவர், எம்.எஸ். விஜயலட்சுமி (தொடர்புக்கு: 7795766746), 15 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார். தொலைபேசி மூலம் ஆர்டர்களைக் கொண்டு சைவ உணவு வழங்கும் வீட்டு வணிகத்தை நடத்துகிறார். பெரிய ஆர்டர்களைக் கையாளும் போது அவர் அவரின் குடும்பத்தின் உதவியையே நாடுகிறார். அவர் பொதுவாக சிறிய பண்டிகைகள், குடும்பக் கூட்டங்கள் மற்றும் தினசரி ஆர்டர்களைச் செய்கிறார்.
சென்னையில், அபிநயா கார்த்திக், சில்லெட்டா என்கிற கேட்டரிங் வணிகத்தை (இணைப்பில் தொடர்பு கொள்ளவும்) நடத்துகிறார். இது ஒரு வீட்டு கேட்டரிங் வணிகமாக தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஒருங்கிணைந்த கேட்டரிங் நிறுவனமாக உள்ளது.
பெண்கள் அவர் அவர் குடும்பங்களுக்கு சமைப்பது மிக சாதாரணமாக நினைக்கப்படுகிறது ஆனால் அந்த சமையலுக்காக பாராட்டு பெற்றவுடன் அதுவே ஒரு வீட்டு கேட்டரிங் வணிகத்தை உருவாக்குவதற்கான தீப்பொறியாகும்.
தீபா எப்போதுமே சமையல் செய்வதை விரும்பினாலும், ஒரு நிகழ்ச்சிக்கு சமைக்கும் போது அவரது சமையலுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஒரு வீட்டு சமையல் பிசினஸ் தொடங்க அவரை ஊக்குவித்தது. ஆரம்பத்தில் அவரது அம்மாவின் கற்றுக்கொண்ட நுணுக்கத்தை அளவு மற்றும் அளவீடுகளுக்காக உபயோகப்படுத்தினர். ஆர்டர் அளவை அடிப்படையாகக் கொண்டு வீட்டிலிருக்கும் பாத்திரங்களை வைத்து உணவுகளை சமைக்க முடிந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஒரு வீட்டு சமையலறை பயன்பாடுகளுடன் எளிதான ஆரம்பநிலைக்கு முன்னேறும்போது தேவையான உபகரணங்களை வாங்கிக்கொள்ள முடியும். சமையல் பற்றிய நிபுணத்துவமும் அறிவும் தொழில்முனைவோர் கனவுகளைக் கொண்ட பல பெண்களுக்கு இது ஒரு இலாபகரமான தேர்வாக அமைகிறது. உதவிகரமான குடும்ப அமைப்பானது ஒரு வீட்டு கேட்டரிங் வணிகத்திற்கான மிக முக்கியமான முதலீடாக இருக்கும்.
விஜயலட்சுமி மற்றும் தீபா, இருவரும் சொந்தமாக சமையல் செய்து, மற்ற பணிகளை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒரு வீட்டு கேட்டரிங் வணிகத்துடன் அதிக பணிச்சுமையை சமாளிப்பது சவாலானது. குறிப்பாக, மெனுக்களை முன்கூட்டியே அமைத்தல், ஆர்டர்களைத் திட்டமிடுவது, பேக்கேஜிங் மற்றும் டெலிவரி விருப்பங்களை முன்னதாகவே திட்டமிடுவது கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்கும்.
வேலையை திட்டமிடுதல்
ஆர்டரைப் பொறுத்து, உணவுப் பொருட்களை வாங்கி, மூலப்பொருட்களை முன்கூட்டியே தயாரிக்கலாம். அதனால் அதை திறம்பட பயன்படுத்த முடியும். வழக்கமாக மெனுவை முன்கூட்டியே திட்டமிடுவது மற்றும் பகிர்வது ஒரு நல்ல நடைமுறையாகும். இது கடைசி நிமிட தயாரிப்புகள், வரவு செலவுத் திட்ட தடைகளை திறம்பட குறைக்கும்.
தீபா கூறுகிறார்கள், “எனது சமையலறையில் உள்ள நான்கு அடுப்புகளும் மெனு தேவைகளுக்கு ஏற்ப ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நான் எப்போதும் உறுதிசெய்கிறேன். அதற்கேற்ப பணி-ஓட்டத்தை திட்டமிடுகிறேன்.”
தற்போதுள்ள வீட்டு சமையலறை அமைப்பைப் பயன்படுத்துவது எளிதானது என்றாலும், சில கூடுதல் பாத்திரங்கள் மற்றும் சமையலறை பொருட்கள் அதியவசமாகவே இருக்கும். ஒரு வீட்டு கேட்டரிங் வணிகம் பெரும்பாலும் ஒரு குடும்ப வணிகமாக மாறுகிறது, எனவே வணிகம் நடத்த விலைகளை ஆரம்பத்திலேயே நிர்ணயிக்க வேண்டும்.
விலை, பேக்கேஜிங் மற்றும் விநியோகம்
தொடங்கும் போது மெனு விலையை தீர்மானிப்பதும் அவசியம். பேக்கேஜிங் முக்கிய பங்கு வகிக்கிறது – புதிய கேடரர்கள் பெரிய பிராண்டுகளின் லேபிள்களைப் படித்து அவர்களின் பிராண்டுக்கான சாத்தியமான விருப்பத்தை உருவாக்கலாம். ஆர்டர்களைத் திட்டமிடுவது உணவு அல்லது கழிவுகள் குவிப்பதைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.
ஆர்டர்கள் மற்றும் டெலிவரி கையாளுதல், டெலிவரி விருப்பங்கள் வணிக மாதிரியின் ஒரு முக்கிய பகுதியாக இருப்பதால், தொடங்குவதற்கு முன் முடிவு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். எடுத்துச் செல்வது அல்லது டெலிவரி செய்வது குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அதை பற்றி வாடிக்கையாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதனால் ஆர்டர் ப்ரோசஸிங் சீராக நடக்கும்.
உதாரணமாக, விஜயலட்சுமி உணவு கேரியர்களில் பேக்கிங் செய்கிறார் மற்றும் உணவு எடுத்துசெல்லமுடியும் தூரங்களுக்கு டெலிவரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்ற ஆர்டர்கள், வழக்கமாக தினசரி மெனுக்கள், வாடிக்கையாளர்களால் எடுத்து செல்லப்படுகிறது.
உங்கள் தொழிலை வளர்க்கும் முறைகள்
இதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வாய்மொழி ஆகியவை ஒரு பரந்த வாடிக்கையாளர் இடத்தை உருவாக்கும் இரட்டை தூண்கள். ஒரு உதவிக்குறிப்பு – உணவுகளை மேம்படுத்துங்கள். இதனால் கேட்டரிங் அதிக வகைகளைப் மெனுவில் பெறுகிறது மற்றும் அதே உணவு வாடிக்கையாளர்களை போர் அடிக்காமல் பார்த்துக்கொள்ளும். வாடிக்கையாளரின் சுவை தேவைக்கேற்ப சமையல் மெனுக்களை கையாளுவதன்மூலம் அடிக்கடி உங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை வளர்ப்பதற்கான மற்றொரு உதவிக்குறிப்பாகும்.
லைசென்ஸ் வாங்குவது வணிகத்தின் அளவைப் பொறுத்தது மற்றும் பெரிய அளவிலான வணிக மாதிரிகளில் நுழையும் போது மட்டுமே அவசியமாகிறது. ஒரு சிறிய உங்கள் அருகில் அணுகக்கூடிய பகுதியில் உணவு சமைத்து பரிமாறுவதற்கு உரிமம் தேவையில்லை. ஆனால் கேட்டரிங் வணிகத்தை விரிவாக்கும் செயல்பாட்டில், உரிமங்கள் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்கள் அவசியம்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு அதிக மூலதன முதலீடு தேவைப்படுகிறது. பிரபலமான உணவு பயன்பாடுகளில் இடம்பெற, லாபத்தின் விளிம்புகள் பெரும்பாலும் வீட்டு கேட்டரிங் மாடலுக்கு குறைவாக வேலை செய்கிறது. சமூக ஊடகங்கள் வழியாகவும் நண்பர்களின் நெட்வொர்க்குகளை பயன்படுத்துவது வணிக மாதிரியாக மாற்றுவதற்கு முன்பு வளர ஒரு சிறந்த வழி.
சில்லெட்டாவை இயக்கும் அபிநயா, மிகத் தெளிவான வேலைப் பார்வையை நம்பிக்கையின் மீது வைத்திருக்கிறார். “சரியான நேரத்தில் ஒரு யோசனை, ஒரு கொள்கை, ஒரு நோக்கம். சமூகத்திற்கு சேவை செய்யும் கொள்கையுடன் உணவுத் தொழிலில் பொறியியலின் நிபுணத்துவத்தை அமல்படுத்துவதே எனது யோசனை,” என்று கூறுகிறார். தன் கிராமத்தில் பல பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதைக் கண்டபோது, சமுதாயத்திற்கு ஏதாவது நல்லதை வழங்கத் தூண்டப்பட்டதை அவர் விளக்குகிறாள்.
புதிய தொழில்முனைவோருக்கு “RYTHM – ரைஸ் யூர்செல்வேஸ் டு ஹெல்ப் மேன்கைன்ட் (மனிதகுலத்திற்கு உதவ உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்)” என்று அவரது மிகவும் கவர்ச்சிகரமான ஆலோசனை உள்ளது. தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது மற்றும் வலுவான ஆதரவு தளமாக குடும்பத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். உண்மையில், பல பெண்கள் தங்கள் ஆழ்ந்த குடும்ப அர்ப்பணிப்பு தங்களின் வணிக முயற்சியைத் தக்கவைக்க உதவியதாகக் கூறுகிறார்கள்.
வணிகத்தின் பொதுவான சவால்களாக சில நேரங்களில் ஆர்டர்களின் பற்றாக்குறை மற்றும் வாடிக்கையாளர் அதிருப்திகளைக் கையாள்வது என்று இந்த மூன்று தொழில்முனைவோர் விளக்குகின்றனர். ஆரம்பத்தில், வீட்டு சமையல் வணிகத்திற்கு ஆர்டர்கள் பொதுவாக ஒழுங்கற்றதாக இருக்கும். ஆனால் இலக்கில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே புதிய உணவு வழங்குபவர்கள் வெற்றியை அடைய முடியும். ஒரு இலக்கு சார்ந்த மற்றும் தொழில்முறை வாடிக்கையாளர் சேவை ஒரு நிலையான வணிகத்திற்கான முக்கிய மூலக்கற்கள்.
கோவிட்டைத் தொடர்ந்து, பெண்கள் தங்கள் பணி ஓட்டம், டெலிவரி விருப்பங்கள், பேக்கேஜிங் போன்றவற்றை மேம்படுத்த வேண்டியிருந்தது என்று விளக்கினார்கள். வீட்டிலிருந்து வேலைச் சுமை, மற்ற பணிகளுடன் இரட்டிப்பாக இருந்ததால் லாக்டௌன் அவர்களின் சமையலறைகளை ஒரு முக்கியமான தேவையாக மாற்றியது. பல குடும்பங்களுக்கு. வீட்டில் கேட்டரிங் நிறுவனங்களால் வழங்கப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, நெருக்கடிகளின் போது பலருக்கு வசதியான மாற்றாக இருந்தது. பேக்கேஜிங் மற்றும் ‘நோ-காண்டாக்ட் டெலிவரி’ குறித்த வணிக மாதிரி நிச்சயமாக மாறியது. ஆரம்பத்தில் பொருட்கள் அணுக முடியாத நிலையில் இருந்ததால் மெனுக்கள் எளிமையையும் பிரதிபலித்தன.
தற்போது, மூலப்பொருட்களின் ஆன்லைன் விநியோகத்துடன், வரையறுக்கப்பட்ட தனிப்பட்ட தொடர்புகளுடன், வணிகங்கள் பெரும்பாலும் வாய்மொழி மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் தொடர்ந்தன. கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து மற்ற எல்லாவற்றையும் போலவே, ‘புதிய இயல்பின்’ தாக்கம் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. அபிநயாவை மேற்கோள் காட்ட, “இறுதியில், கோவிட் -19 மனிதகுலத்திற்கு கற்பிக்கும் மிகப்பெரிய பாடம் என்னவென்றால், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதுதான்.”
பட ஆதாரம்: எம்.எஸ். விஜயலட்சுமி, தீபா சஜி செரியன், அபிநயா கார்த்திக்
Am a feminist who wished for a room but got stuck in a jar. Still, I go on clueless but hopeful and I keep writing. Taking it one step at a time! read more...
Please enter your email address