Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
நம் இளமை காலத்தின் பெரும் பகுதியை ஆட்கொள்கிறது கல்வி பயணம் என்று சொன்னால் அது மிகையாகாது. "இளமையில் கல்" என்று பழமொழியே இருக்கின்றதே! இந்த கல்வி நம்மக்கு சரியான அளவில் கிடைத்து விடுகிறதா? இதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ இருக்கிறாரே, அவரை தெரியவில்லை?
நம் இளமை காலத்தின் பெரும் பகுதியை ஆட்கொள்கிறது கல்வி பயணம் என்று சொன்னால் அது மிகையாகாது. “இளமையில் கல்” என்று பழமொழியே இருக்கின்றதே! இந்த கல்வி நம்மக்கு சரியான அளவில் கிடைத்து விடுகிறதா? இதனை முடிவு செய்வதற்கான அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ இருக்கிறாரே, அவரை தெரியவில்லை?
தூண்டுதல் எச்சரிக்கை: இது தற்கொலையைப் பற்றி பொதுவாக பேசுகிறது மற்றும் பாதிக்கபட்டவர்களைத் தூண்டலாம்.
அவரே தான்!
தேர்வு!
இந்த தேர்வு என்பது பள்ளி சேருவதற்கு முன்பே நம் கல்வி பயணத்தில் சேர்ந்து கொள்கிறது. எப்படி?
இது என்ன? அது என்ன ?
என்று கேள்விகளுக்கு பதில் சொன்னால்தான் பள்ளியில் அனுமதி கிடைக்கிறது. நாம் ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு செல்வதையும் இந்த தேர்வு தான் தீர்மானிக்கிறது. மதிப்பெண்கள் எண்ணப்படும் எண்கள் தான் எத்தனை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்துள்ளது நம் வாழ்வில்.
இந்த தேர்வு சிறு வகுப்புகளில் பெரிதான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் வகுப்பின் என் அதிகமாகும் போது தான் இதன் பின்னால் ஒளிந்திருக்கும் மற்றொரு உருவம் சிறிய அளவில் தெரிய தொடங்குகிறது. முதலில் பத்தாவது வகுப்பு வரும் போது லேசாக தலை காட்டுகிறது. ஏன் என்றால் நம் பதினொன்னாம் வகுப்பில் எடுக்க போகும் பிரிவுக்கு இந்த மதிப்பெண்கள் முக்கியமே. பின் பன்னிரெண்டாம் வகுப்பின் போது முழுதாக வெளியாகிறது. ஏன்? அப்போது வருவது போது தேர்வு. அந்த தேர்வின் முடிவே நம் பிற்காலத்தை கணிக்க கூடிய திறமை வாய்ந்தது. அதன் முக்கியத்துவம் சில வருடங்களுக்கு முன்பாகவே நம் பெற்றோர்கள் நம்மக்கு புரியவைத்துவிடுகின்றனர். ஒளிந்திருக்கும் உருவம் யாரென்று தெரிந்திருக்குமே!
இந்நேரம் புதிருக்கான விடையை கணித்திருப்பீர்கள்.
பயம் !!
சரி! பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வந்துள்ளது. அடுத்து என்ன, நேரே கல்லூரி வாசல் தானே? சில நேரத்தில் இன்னுமொரு படியையும் தாண்ட வேண்டிருக்கும், அது தான் நுழைவு தேர்வு.
இந்த நிலைமையில் தான் பயம் இன்னும் கொஞ்சம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது. ஒரு வேளை தேர்ச்சி பெறவில்லை என்றால்? அய்யோ! ஒரு வருடம் வீணாகி விடுமே! அடுத்த வருடம் நிச்சயம் தேர்ச்சி பெறுவோமா என்ற நம்பிக்கை முழுதாக வர மறுக்கிறதே!
இந்த நேரத்தில் தான் மாணவ மாணவிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தோல்வி சிலரில் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு அவர்களை தூண்டுகிறது. அதனால் தான் பெற்றோர்கள் மிக கவனமாக அவர்களோடே இருந்து அவ்வாறான முடிவுக்கு அவர்கள் செல்லாதவாறு பாதுகாத்துக்கொள்கின்றனர்.
இதுவும் நம்மக்கு தெரிந்ததே. ஆனால் பரீட்சை முடிவு வருவதற்கு முன்னர் தோல்வி பயத்தால் தவறான முடிவு எடுத்துவிட்டால்?
படிக்கும்போதே மனம் பதறுகிறதே. சில நேரங்களில் இதுவும் நடக்கிறது.
பதினேழு வயதான அனு செங்கல்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். போன மாதம் மருத்துவத்திற்காக நுழைவு தேர்வு எழுதியுள்ளார். அனுவின் பெற்றோரும் பள்ளி ஆசிரியர்களே. தேர்வுக்கு பிறகு பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்று மனம் வருந்தியுள்ளார். மனசோர்வின் காரணமாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தாள். ஒரு மாதம் பின்னர் அவர் இந்த உலகை விட்டு செல்ல நேர்ந்துள்ளது.
பெற்றோர்களே! பயம் எப்போதுமே ஆபத்தான ஒன்று தான். எந்த நேரத்திலும் நம் பிள்ளைகளை கவனமாக நடத்துவது நம் கடமை. தேர்வு முடிவு வந்த பிறகுதான் என் மகளோ மகனோ சோர்வடைவான் என்று எண்ணாமல், தேர்வு எழுதிய பின்னரும் ஒரு வேளை அவர்கள் சரியாக எழுதவில்லை என்று மனம் வருந்தினால், உடனே கவனியுங்கள். இது இல்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களோடு சேர்ந்து முடிவு செய்யுங்கள். அவர்களை தேவை இல்லாத மன உளைச்சலில் இருந்து சீக்கிரமே மீட்டெடுங்கள்.
பயம் என்னும் அரக்கனை ஒழிக்க, தன்னம்பிக்கை என்னும் ஆயுதத்தை அவர்களிடம் கொடுங்கள்.
இதுபோன்ற செய்திகளை மற்றவர்களோடு பகிருங்கள். இனி எந்த ஒரு மாணவ மாணவியும் இது போல் ஓர் முடிவு எடுக்க விட மாட்டோம் என்று உறுதி செய்வோமே!
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது மனச்சோர்வடைந்தால் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், இந்தியாவில் கிடைக்கும் சில உதவி மையங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. தயவுசெய்து அழையுங்கள்.
ஸ்பீக்2அஸ், தமிழ்நாடு: 9375493754
சினேகா, சென்னை: 044-2464 0050
அஸ்ரா, மும்பை: 022-27546669
லைஃப்லைன், கொல்கத்தா: 033-2474 4704
சஹாய், பெங்களூர்: 080–25497777
ரோஷ்னி, ஹைதராபாத்: 040-66202000, 040-66202001
read more...
Please enter your email address