Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் ஒரு வலுவான பெண், அவரின் தாயார் தனது உரிமைகளுக்காக போராட தூண்டினார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல்கள் நவம்பரில் நடைபெற அந்நாடு தயாராக உள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், துணை ஜனாதிபதி வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார்.
ஆங்கிலத்தில் அசல்
இது கமலா ஹாரிஸை, முதல் கறுப்பின பெண் மட்டுமல்ல, அமெரிக்காவில் ஒரு பெரிய கட்சியின் ஜனாதிபதி டிக்கெட்டில் பட்டியலிடப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர்ராகவும் ஆக்குகிறது. கமலா ஹாரிஸ் ஜமைக்காவில் பிறந்த அமெரிக்க பொருளாதார பேராசிரியரான டொனால்ட் ஹாரிஸ் மற்றும் தமிழ்-அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளரும் சிவில் உரிமை ஆர்வலருமான ஷியாமலா கோபாலனின் மகள் ஆவார்.
கமலா ஹாரிஸ் ஒரு சாதனையாளர். துணை ஜனாதிபதி போட்டியாளராக இருப்பதைத் தவிர, அவர் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர், ஜனநாயக செனட்டர் மற்றும் செல்வாக்கு மிக்க மனித உரிமை ஆர்வலர் ஆவார். ஆனால் இவை அனைத்திற்கும் முன்பாக, அவர் தாயின் சித்தாந்தங்கள் அவரது வாழ்க்கையை வடிவமைத்தன.
You can’t know who @KamalaHarris is without knowing who our mother was. Missing her terribly, but know she and the ancestors are smiling today. #BidenHarris2020 pic.twitter.com/nmWVj90pkA — Maya Harris (@mayaharris_) August 12, 2020
You can’t know who @KamalaHarris is without knowing who our mother was. Missing her terribly, but know she and the ancestors are smiling today. #BidenHarris2020 pic.twitter.com/nmWVj90pkA
— Maya Harris (@mayaharris_) August 12, 2020
கமலா ஹாரிஸின் தாயார், ஷியாமலா கோபாலன், அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான உத்வேகம் அளித்தவர். 1938 இல் சென்னையில் பிறந்த ஷியாமலா கோபாலன் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், 20 வயதில், ஊட்டச்சத்து மற்றும் உட்சுரப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பேர்கெலேக்கு சென்றார்.
அவரது வாழ்நாள் முழுவதும், அவர் சிவில் உரிமைகள் செயல்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டதை விட, தனது விருப்பப்படி ஒரு திருமணத்தை விரும்பினார்; ஜமைக்காவில் பிறந்த அமெரிக்கரான டொனால்ட் ஹாரிஸை மணந்தார்.
ஷியாமலா கோபாலனின் அச்சமின்மை, தைரியம் மற்றும் உரிமைக்காக போராடுவதற்கான உறுதியே அவரது மகள்களைத் சுய சிந்தணை உடய பெண்களாக இருக்கத் தூண்டியது!
பல முறை, கமலா ஹாரிஸ் தனது தாயார் தன்னை ஒரு சிறந்த நபராக வளர்த்தது எப்படி என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நேர்காணலில், தனது தாயார் சொன்னதை கூறினார், “சும்மா உட்கார்ந்து பிரச்சனைகளை பற்றி புகார் செய்யாதே, ஏதாவது செய்!”
Thinking of my mother today. She was smart, fierce, and my first campaign staffer — and I dearly wish she was here with us for this moment. Her spirit still drives me to fight for our values. pic.twitter.com/pf0lFrvoWI — Kamala Harris (@KamalaHarris) January 22, 2019
Thinking of my mother today. She was smart, fierce, and my first campaign staffer — and I dearly wish she was here with us for this moment. Her spirit still drives me to fight for our values. pic.twitter.com/pf0lFrvoWI
— Kamala Harris (@KamalaHarris) January 22, 2019
ஷியாமலா கோபாலன் தனது மகள்கள் தங்கள் கலாச்சார வேர்களை ஒருபோதும் மறக்காமல் பார்த்துக் கொண்டார். அதனால்தான் அவர் கமலா மற்றும் அவரது சகோதரி மாயாவுக்கு சமஸ்கிருத பெயர்களைக் கொடுத்தார். ஷியாமலா தனது வெற்றிகரமான மகள்களுக்கு ஆழ்ந்த செல்வாக்கையும் நீடித்த மரபையும் அளித்துள்ளார்.
கமலாவின் அச்சமின்மை மற்றும் போரிடும் தன்மை சந்தேகத்திற்கு இடமின்றி அவரது லட்சியத் தாயிடமிருந்து பெறப்பட்டது. கமலா ஹாரிஸ் யார் என்று அவளுடைய தாய் யார் என்று தெரியாமல் நீங்கள் உண்மையில் அறிய முடியாது!
I read, I write, I dream and search for the silver lining in my life. Being a student of mass communication with literature and political science I love writing about things that bother me. Follow read more...
Please enter your email address