Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?' என்று நிழலை நிஜமாக்குகிறார், நம் வாசகி ரம்யா.
‘மரங்கள் பேசினால், அதிலும் வெட்டப்பட்ட மரங்கள் பேசினால், என்ன பேசும்?’ என்று நிழலில் நிஜம் சேர்த்து மரங்களின் குரலுக்கு உரு சேர்க்கிறார், நம் வாசகி ரம்யா.
இரு இலைகள் விரிகையில்இவ்வுலகை நான் காண்கையில்“துளிர் விட்டாயா செல்லமே” என்றுஅணைத்த என் அன்னையின்அன்பு முகம் கண்டேனே
தேவைக்கேற்ப தண்ணீர் தந்தவள்கரங்களை கறையாக்கி உரம் சேர்ந்தவள்பூச்சிகள் அண்டாது பாதுகாத்தவள்நரைக்கேசமோ, முகச்சுருக்கமோ,தளர்நடையோ, தனித்திருக்கும் அவள் வாழ்வில்தடையாக இருந்ததில்லை
சுற்றிலும் என் உறவுகள்சுதந்திரமாக வளர்கிறோம்நாட்களும் வருடங்களாக நகரநாங்களும் வேரூன்றி நின்றோம்அதோ அந்நாள்!
அந்நியர்கள் பலர், ஆயுதத்துடன்அவர்கள் மொழி புரியவில்லைஅவளின் அழுகை நிற்கவில்லைவதைபட்டோம் வெட்டப்பட்டோம்
தவறென்ன செய்தேன், மானிடா?மாசில்லா காற்றை தந்தேன்மழை பொழிய உதவினேன்பறவைகள் தங்க மகிழ்ந்தேன்பரந்த நிழல் குடை ஆனேன்
என்றாலும் கலங்காதே தாயே!
அய்யா அப்துல் கலாமின் கனவாகஉமது கண்ணீரின் விதையாகமீண்டு(ம்) எழுவேன்எம்மை வெட்டினாலும் மீண்டு(ம்) வருவேன் மனிதா . . . உன்னை காத்திடவே!
ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப் படுகிறது. நம்மால் இயன்ற வழிகளில் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வருவோம்.
பட ஆதாரம்: Photo by Harry Cunningham @harry.digital from Pexels
read more...
Please enter your email address