Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
“சில நாட்களாக நான் தனிமையில் உள்ளதைப்போல உணர்ந்தேன்… என்னை சுற்றி அனைவரும் உற்சாகமா இருந்தாலும் எனக்குள்ளே ஏதோ ஒரு வெறுமை இருந்தது. ஒரு நடிகையாக பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய மன அழுத்தம் என் வாழ்க்கையே மாற்றியது… என்னை மிகவும் பாதித்தது,” என்று பிரபல திரைப்பட நடிகை தீபிகா படுகோனே தனது மன அழுத்தத்தை பற்றி பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமீபத்திய ஆண்டுகளில், மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது உலகளாவிய வளர்ச்சி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மனச்சோர்வு. 15-29 வயதுடையவர்களில் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணம் தற்கொலை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது (https://www.who.int/news-room/fact-sheets/detail/suicide).
உடல்நலத்தை ஒரு பகுதியாகவும் பெண்களின் மன நிலையை வேறு பகுதியாகவும் பிரிக்கவோ குறைக்கவோ முடியாது. ஆரோக்கியம் விதிவிலக்கல்ல. சிறந்த மன ஆரோக்கியம் உள்ளார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
லான்செட் 2015 சர்வேயின் படி குறிப்பாக இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் தற்கொலை அதிக அளவில் காணப்படுகிறது. உலகளவில் பெண்கள் தற்கொலையில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. உலக பெண்கள் தற்கொலையில் இந்தியா 40% பங்களிக்கிறது.
● உலக சுகாதார நிறுவனம் ஆய்வின் படி ஆண்களைவிட பெண்கள் அதிக மனநல நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். 41.9% குறைபாடுகளுக்கு மனச்சோர்வுக் கோளாறுகள் காரணமாக இருக்கின்றன.
● நடுத்தற வயதினரிடையே முன்னணி மனநலப் பிரச்சனைகளாக மன அழுத்தம், மூளை நோய்க்குறி மற்றும் டிமென்ஷியா காணப்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
● வன்முறை, மோதல்கள், உள்நாட்டுப் போர்கள், பேரழிவுகள் மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 50 மில்லியன் மக்களில் 80% பெண்கள் மற்றும் குழந்தைகள்.
● பெண்களுக்கு எதிரான வாழ்நாள் வன்முறை விகிதம் 16% முதல் 50% வரை இருக்கும். இது அவர்களது மன அமைதியை பாதித்து மன உளைச்சலுக்கு காரணமாக அமைகிறது.
● குறைந்தது ஐந்து பெண்களில் ஒருவராவது தங்கள் வாழ்நாளில் கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சிக்கு ஆளாகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஆய்வின்படி மன அழுத்தம், பதட்டம், உளவியல் துயரம், பாலியல் வன்முறை, குடும்ப பிரச்சனை/ வன்முறை மற்றும் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டு விகிதங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள ஆண்களை விட பெண்களை அதிக அளவில் பாதிக்கிறது.
பெண்கள் பல பாத்திரங்கள், பாலின பாகுபாடு மற்றும் தொடர்புடைய வறுமை, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வேலை, குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றால் உருவாக்கப்படும் அழுத்தங்கள் பெண்களின் மோசமான மன ஆரோக்கியத்திற்கு காரணமாகின்றன.
இழப்பு, தாழ்வு மனப்பான்மை, அவமானம் அல்லது சிக்கல் உணர்வை ஏற்படுத்தும் கடுமையான வாழ்க்கை நிகழ்வுகள் மனச்சோர்வை உண்டாக்கலாம்.
மனநல அறிவியலின் சமீபத்திய முன்னேற்றங்களால், பெரும்பாலான மனநல நிலைமைகள் கட்டுப்படுத்தக்கூடியவை, குணப்படுத்தக்கூடியவை, தடுக்கக்கூடியவை என்பதை தெளிவாக நிரூபித்துள்ளன.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது மனச்சோர்வடைந்தால் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், இந்தியாவில் கிடைக்கும் சில உதவி மையங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. தயவுசெய்து அழையுங்கள்.
ஸ்பீக்2அஸ், தமிழ்நாடு: 9375493754
சினேகா, சென்னை: 044-2464 0050
அஸ்ரா, மும்பை: 022-27546669
லைஃப்லைன், கொல்கத்தா: 033-2474 4704
சஹாய், பெங்களூர்: 080–25497777
ரோஷ்னி, ஹைதராபாத்: 040-66202000, 040-66202001
read more...
Please enter your email address