இந்த தீபாவளிக்கு நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய எட்டு விரைவான, எளிதான மற்றும் சுவையான தீபாவளி கார வகைகள் பலகாரம்

தீபாவளி பண்டிகை உணவைப் பற்றி பேசும்போது, ​​​​பெரும்பாலும் இனிப்புகளைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் மற்ற பலகாரம் பற்றி பேசுவோர் குறைவு. இந்த தீபாவளியை சுவையூட்டும் விரைவான மற்றும் எளிதாக செய்யக்கூடிய கார வகைகள் பலகாரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை உணவைப் பற்றி பேசும்போது, ​​​​பெரும்பாலும் இனிப்புகளைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் மற்ற பலகாரம் பற்றி பேசுவோர் குறைவு. இந்த தீபாவளியை சுவையூட்டும் விரைவான மற்றும் எளிதாக செய்யக்கூடிய கார வகைகள் பலகாரம் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Original in English

நான் தீபாவளியை நினைக்கும் போது, ​​அது ஒரு துடிப்பான, வண்ணமயமான விளக்குகளின் திருவிழாவாகவே பார்க்கிறேன். இது மிக முக்கியமான இந்திய பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி என்பது ‘விளக்குகளின் வரிசைகள்’ என்று பொருள்படும். அதன் தோற்றம் ஒரு முக்கியமான அறுவடைத் திருவிழாவாக வரலாற்றில் அறியப்படுகிறது.

பெரும்பாலான இந்தியப் பண்டிகைகளைப் போலவே, ‘விளக்குகளின் திருவிழா’ கொண்டாட்டம் பலவகை உணவுகள் மூலம் கொண்டாடப்படுகிறது. அது பல்வேறு சுவைகள் மற்றும் வடிவங்களில் வருகிறது.

தீபாவளி விரைவில் வரவிருக்கும் நிலையில், எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சில சிறப்பான, ருசிமிகுந்த விருந்துகளை வழங்க விரும்புகிறோம். பாரம்பரிய இனிப்புகளுடன் சேர்த்து காரங்கள் இல்லாமல் எந்த இந்திய பண்டிகையும் முழுமையடையாது – எனவே இந்த முறை சுவையான தீபாவளி காரங்கள் தொகுத்துள்ளேன்.

இங்கே எனக்குப் பிடித்த சில தீபாவளி கார வகைகள் உள்ளன. அவை தயாரிக்க எளிதானவை, ருசியானவை மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்டவை. விருந்தினர்கள் வரும்போது அவற்றை நீங்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுக்காது. சமையலில் அடிப்படை அறிவு உள்ள எவரும் இந்த தீபாவளி கார வகைகளை தயார் செய்யலாம்.

இந்த தீபாவளி சுவையூட்டிகள் தயாரிப்பதில் சிறந்த பகுதி என்னவென்றால் தயாரிப்பின் எளிமை என்பது உங்கள் குழந்தைகளும் உங்களுடன் சேர்ந்து இதை செய்ய முடியும் என்பதாகும். மேலும் இந்த பண்டிகைக் காலத்தில் உங்கள் குழந்தைகளுடன் அன்பை பிணைக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

தீபாவளிக்கான பல தமிழ் பலகாரம் தயாரிப்புகள், குறிப்பாக இனிப்புகள், மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே இந்தக் கட்டுரையில் தமிழ் உணவு வகைகள் மற்றும் மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து, தமிழ் வீடுகளுக்கு வழக்கத்தில் இருந்து ஒரு நல்ல மாற்றத்தைக் கொடுக்க, எளிதான சுவையான விருப்பங்களின் கலவை உள்ளது.

மசாலா பொரி 

மசாலா பொரி ஒரு இந்திய காரவகை. காரமாக மற்றும் சுவையில் சற்று புளிப்பாக இருக்கும். 15 நிமிடங்களுக்குள் தயாரிக்கப்படும் இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த சிற்றுண்டி ஆகும்.

மசாலா பொரி செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கே பாருங்கள்.

கட்டா மீத்தா இந்தோரி அவல் 

பெயர் குறிப்பிடுவது போல, இது சிறிது காரமானதாக இருக்கும். மேலும் அதில் இனிப்பு சுவையும் இருக்கும். 

அவல் செய்முறையை இங்கே பாருங்கள்.

வேர்க்கடலை மசாலா

உள்ளே இருக்க விரும்புவோருக்கும், வெளியில் கொண்டாட விரும்புவோருக்கும், வெளியில் பட்டாசு வெடிப்பதைப் பார்த்துக் கொண்டு வாயில் ஒன்றிரண்டு துண்டைப் போட்டுக் கொள்ள ஒரு விரைவான கார வகை இது. குறைந்தபட்சம் ஒரு மாதம் வரை சுவை மாறாமல் நன்றாக இருக்கும் இந்த வேர்க்கடலை மசாலாவை முயற்சிக்கவும்.

வேர்க்கடலை மசாலா செய்முறையை இங்கே பாருங்கள்.

சுட்ட சிவ்டா

இது மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக செய்யப்படும் தீபாவளி கார வகைகளில் ஒன்றாகும். இது சுவையானது மற்றும் வட இந்தியாவில் பிரபலமான விருப்பமாகும். மாலையில் சூடான டீயுடன் ஒரு சிற்றுண்டியாக பரிமாறவும்.

செய்முறையை இங்கே பாருங்கள்.

ஓமப்பொடி தீபாவளி மிச்சர் 

இந்த கலவையானது முற்றிலும் வாயில் நீர் சுரக்கவைக்கும் ஒரு அருமையான கார வகையாகும். மாலை நேரங்களில் பரிமாறலாம். இது சுவையில் சற்று காரமானது.

ஓமப்பொடி செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கே பாருங்கள்.

கார்ன்ஃப்ளேக்ஸ் மிச்சர் (குறைந்த கொழுப்பு தீபாவளி கார வகைகள் பலகாரம்)

என்னைப்போன்று இந்த பண்டிகைக் காலத்தில் கூடுதல் கலோரிகளைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த கார வகையாகும். இது ஒரு எளிய மற்றும் சுவையான விருப்பமாகும். சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் அதை காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைக்கலாம், விருந்தினர்கள் வரும்போதும் பரிமாறலாம்.

செய்முறையை இங்கே பாருங்கள்.

தட்டை

இது தீபாவளி கார வகையாகும். இது கொண்டாட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தென்னிந்தியாவின் பெயர்போனைச் சுவையான சமையல் குறிப்புகளில் ஒன்றாகும். கொண்டாட்டங்களின் பகிர்வு அம்சத்தைக் குறிக்க, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள இது பொதுவாக பெரிய அளவில் செய்யப்படுகிறது.

தட்டை செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கே பாருங்கள்.

தேங்காய் சீடை 

தீபாவளிக்கு சுலபமாக செய்யக்கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. எண்ணெயில் பொரித்த இந்த சிறிய அரிசி உருண்டைகளை, நம் தேவைக்கேற்ப இனிப்பு உணவாகவோ அல்லது காரமான உணவாகவோ செய்யலாம். இந்த இடுகையில் நாம் அனைவரும் கார வகைகளைப் பற்றியது என்பதால், உப்பு / தேங்காய் சீடை செய்முறைக்கான இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சீடை செய்வது எப்படி என்ற செய்முறையை இங்கே பாருங்கள்.

நீங்கள் இந்த தீபாவளி காரா வகைகளை தயாரித்து மகிழ்ந்திருந்தால், கீழே உள்ள உங்கள் கருத்துகளில் எனக்கு தெரியப்படுத்துங்கள்… அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

பட ஆதாரம்: YouTube மற்றும் Pexels

About the Author

anjali7133

I am Anjali, from Bangalore. Mother to a six year old boy. A one-liner that sums me: Obsessed with books, possessed by travel and intrigued by spirituality. read more...

1 Posts | 1,271 Views
All Categories